திடீர் விபத்து… கண்ணை இழந்த மனோஜ்… லவ் பிஜிஎம் வேற… புரோமோவால் கடுப்பான ரசிகர்கள்!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சி தொடரான சிறகடிக்க ஆசை தற்போது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ரசிகர்களிடம் சில தொடர்கள் மட்டுமே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். அப்படி ரசிகர்களால் தேடி வந்து பார்க்கப்படும் தொடராக இருந்தது சிறகடிக்க ஆசை. இதில் ஹீரோவாக முத்து என்ற கேரக்டரும், ஹீரோயினாக மீனா என்ற கேரக்டரும் அமைக்கப்பட்டது.
ஆனால் தற்போது மொத்த சீரியலுமே வில்லியான ரோகிணியை நோக்கி தான் நகர்ந்து வருகிறது. அவர் தொடர்ந்து பித்தலாட்டங்களை செய்து வந்தாலும் சிக்காமல் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கிறது.
தொடர்ந்து அவரும் கணவர் மனோஜும் இணைந்து பல வேலைகள் செய்தாலும் பெரிய பிரச்சினைகளில் இதுவரை மாற்றவில்லை. இதனால் ரசிகர்கள் டைரக்டரை இந்த ரோகிணி தான் தற்போது ஹீரோயினா என கேட்கும் அளவுக்கு மாறி இருக்கிறது நிலைமை. இதே பிரச்சினையால் இந்த தொடர் தற்போது டிஆர்பிலும் பெரிய அடி வாங்கி இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ரோகிணிக்கு பிரச்சினை கொடுத்து வந்த பத்தாவது இடத்தில் இருந்த டிஆர்பி தற்போது தப்பி தத்தி நான்காம் இடம் வரை முன்னேறி இருக்கிறது. ஆனால் அதற்கும் தற்போது இயக்குனர் தானாகவே வேட்டுவைத்துக் கொள்ளும் விஷயம் ஒன்றை செய்து இருக்கிறார்.
மனோஜ் மற்றும் ரோகிணி வீடு வாங்க 30 லட்சம் பணம் கொடுத்த கதிரை பார்த்துவிட அவரை துரத்தி செல்கிறார் மனோஜ். அப்பொழுது ஏற்பட்ட விபத்தில் அவருடைய கண் பார்வை இழந்து விடுகிறார். இது குறித்து ரோகிணியிடம் அவர் வருத்தமாக இனி நான் யாருடைய உதவியது கேட்க வேண்டும் தானே எனக் கூறுகிறார்.
அதற்கு ரோகிணி நான் இருக்கிறேன் என தைரியம் கொடுக்கிறார் என்ற புரோமோ வெளியாகி இருக்கிறது. தற்போது இதைப் பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு கதை தேவைதானா? இருக்கும் பிரச்சினைகளை சரி செய்யாமல் புது கதையை இயக்குனர் மாற்றி இருப்பது சரி இல்லை.
தற்போது மனோஜிற்கு ஆதரவாக ரோகிணி இருப்பார். இதனால் அவருடைய உண்மை தெரிந்தாலும் கூட மனோஜ் அவரை விட்டு விலக மாட்டார். விஜயாவும் மகனை பார்த்துக்கொண்ட மருமகளை ஏற்றுக்கொள்ள தான் இந்த கதைக்களம் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.