பைசன் படத்துல வர்ற காளைமாடனுக்கு பின்னாடி இப்படி ஒரு அர்த்தமா? வெளியான அதிர்ச்சி தகவல்
Baison: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் தயாராகிக் கொண்டு வரும் திரைப்படம் பைசன். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு சிறப்பு விருந்தினராக விக்ரமும் அழைக்கப்பட்டு இந்த படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் அந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அந்த போஸ்டரில் பைசன் என்ற படத்தின் தலைப்புக்கு கீழ் காளைமாடன் என்ற ஒரு டேக் லைனும் மாரி செல்வராஜ் பயன்படுத்தியிருப்பார். எதற்கு அந்த காளைமாடன் என்ற பெயரை வைத்திருக்கிறார் என அனைவருக்கும் ஒரு சந்தேகத்தை எழுப்பியது. அதற்கான விடை இப்போது இணையத்தில் வைரலாக இருக்கின்றது. அதாவது இந்த திரைப்படம் ஒரு கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படமாகும்.
இதையும் படிங்க: இரண்டு ரசிகர்கள் எழுதிய கடிதம்!.. சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டம் வந்தது இப்படித்தான்!..
அதுவும் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் இடையிலான ஒரு கிராமத்தில் பிறந்த மனத்தி கணேசன் என்ற கபடி வீரரின் கதையை மாரி செல்வராஜ் ஃபோக்கஸ் செய்து எடுத்து இருப்பாரோ என்ற ஒரு சந்தேகமும் எழுகிறது. எட்டு வயதிலிருந்தே கபடி மீது ஆர்வம் கொண்ட மனத்தி கணேசன் 18 வது வயதில் சிறந்த கபடி வீரராக அதுவும் இந்தியாவில் இருந்து இரண்டாவது அர்ஜுனா விருதை பெற்ற ஒரு கபடி வீரராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
தொடர்ந்து கபடியில் பல விருதுகளை அள்ளிய மனத்தி கணேசன் 1993 ஆம் ஆண்டு மின் வாரியத்தில் இவருக்கு அரசு வேலை வழங்கப்படுகிறது. 1994 ஆம் ஆண்டு மீண்டும் ஆசிய கோப்பையில் இவருடைய டீம் சாம்பியன் பட்டத்தை பெறுகிறது. கபடி விளையாட்டுக்காக இவர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்தும் வேறு பல பயிற்சிகளை மேற்கொண்டும் தன்னை தயார்படுத்தி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இவருடைய தலையும் மிகவும் வலிமையாக மாறுகிறது.
இதையும் படிங்க: டைரக்டர் பிரச்னையே முடிஞ்சிதானு தெரியலை… தயாரிப்பாளரும் பிரச்னையா? தளபதி69ல் என்ன தான் நடக்குது?
அதனாலயே இவரை புல்லக் கணேசன் என அப்போது அழைத்து வந்தார்களாம். புல்லக் என்றால் காளை மாடு. அதாவது ஒரு காளை மாடு மோதினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு வலிமையான தலையை கொண்டவராக மனத்தி கணேசன் அந்த காலத்தில் இருந்து வந்தாராம். அதை குறிப்பிடும் வகையில் தான் மாரி செல்வராஜ் பைசன் திரைப்படத்திற்கு கீழ் காளைமாடன் என்ற பெயரை வைத்திருப்பார் என சொல்லப்படுகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி மனத்தி கணேசன் மாரி செல்வராஜின் உறவினர் என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.