கேப்டன் மகனை எதிர்த்து வடிவேலுவா? அதிரடியான முடிவை எடுத்த வைகைபுயல்.. இதுதான் விஷயமா?
Actor Vadivelu: இப்போது அரசியல் களம் வலுப்பெற்று வருகிறது. அதுவும் திரை பிரபலங்கள் ஆளுக்கு ஒரு தொகுதியாக தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து தங்களது பிரச்சாரத்தினை தொடங்கி இருக்கிறார்கள். புதுப்புது மாற்றங்களை சந்தித்து வரும் அரசியல் களம் இந்த முறையும் பல திருப்பங்களை எதிர்கொண்டுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சி தலைவராக இருந்த சரத்குமார் யாரும் எதிர்பாராத விதமாக மத்திய ஆளும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தன்னோடு தன் மனைவி ராதிகா சரத்குமாரையும் அந்த கட்சியில் இணைத்துக் கொண்டார். அவர் இப்போது விருதுநகர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார். ராதிகாவை எதிர்த்து கேப்டன் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரனும் போட்டியிட இருக்கிறார்.
இதையும் படிங்க: கமலுக்கு செல்ல வேண்டிய படத்தினை கலைத்துவிட்ட முன்னணி நடிகர்…. வெவரம் தான்!
விஜய பிரபாகரனும் ராதிகாவும் ஒரே நேரத்தில் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். ராதிகா விஜய பிரபாகரனின் தோளில் தட்டி அவருடைய வாழ்த்துக்களை கூறி சென்றார். அதுமட்டுமல்லாமல் தன் மகளும் விஜய பிரபாகரனும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதால் விஜய பிரபாகரனும் தன் மகன் போல் தான் என ராதிகா பத்திரிக்கையாளர் பேட்டியில் கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக விஜய பிரபாகரனும் ராதிகா மட்டும் என் அம்மா இல்லை. விருதுநகர் தொகுதியில் உள்ள அனைத்து மக்களும் தனக்கு அம்மா போல் தான் எனக் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இப்படி ஒவ்வொருவரும் தங்களது கருத்தினை பதிவு செய்து வரும் நிலையில் வடிவேலுவும் தமிழக ஆளும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதோடு அவர்களுக்கு சார்பாக வடிவேலு தன்னுடைய பிரச்சாரத்தினையும் தொடங்க இருக்கிறார்.
இதையும் படிங்க: என் வாழ்க்கையில முக்கியமானவன் நீதான்!.. விஜயகாந்தே நெகிழ்ந்து சொன்ன இயக்குனர் யார் தெரியுமா?…
இதில் விருதுநகர் தொகுதியில் மட்டும் நான் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என திட்டவட்டமாக வடிவேலு கூறியதாக பிரபல மூத்த பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் அவருடைய யூடியூப் சேனலில் கூறியிருக்கிறார். ஏற்கனவே வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே கடுமையான பனிப்போர் நடந்த நிலையில் மக்கள் செல்வாக்கினை மொத்தமாக இழந்தார் வடிவேலு.
இதற்கிடையில் கேப்டனின் மறைவிற்கும் வராத வடிவேலுவை மக்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக வசைப்பாடிக்கொண்டு வந்தனர், இதில் கேப்டனின் மகன் விஜய பிரபாகரனை எதிர்த்து பிரச்சாரம் செய்தால் தன்னுடைய நிலைமை என்னவாகும் என முன்னதாகவே கணித்துக் கொண்டார் வடிவேலு. அதனால் தமிழக ஆளும் கட்சியில் வடிவேலு விருதுநகர் தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று கூறியதாகவும் அதற்கு அந்த தலைமை கட்சி சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: செழியன், ஜெனி பிரச்னைக்கு தீர்வு கண்டு பிடிக்க வந்துட்டாங்கப்பா!…முடிச்சி விடுங்க… முடிச்சி விடுங்க…