வரிஞ்சு கட்டிட்டு திட்டுன ரசிகர்கள்.. வேண்டாம் பா சாமின்னு நினைச்ச வெங்கட் பிரபு.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை...!
வெங்கட் பிரபு மங்காத்தா திரைப்படத்தை எடுக்க மாட்டேன் என்று கூறியது தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசி இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. விளையாட்டு தனமாக படங்களை எடுத்து வந்த இவர் மங்காத்தா திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய புகழை பெற்றார். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து GOAT என்ற திரைப்படத்தை எடுத்து முடித்து இருக்கின்றார்.
இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. மேலும் இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, அஜ்மல், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் அஜித்துடன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியானதை பார்த்து ரசிகர்கள் பலரும் அடுத்ததாக நடிகர் அஜித்தை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கப் போகிறாரா வெங்கட் பிரபு என்று கூறி வந்தார்கள். ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ஒரு பேட்டியில் வெங்கட் பிரபு குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.
வெங்கட் பிரபு மங்காத்தா திரைப்படத்தை இயக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியான உடனே ரசிகர்கள் பலரும் அவரை திட்ட தொடங்கி விட்டார்கள். சமூக வலைதள பக்கங்கள் என அனைத்திலும் அவரை போட்டு ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். விளையாட்டுத்தனமா படம் எடுத்து வருகிறீர்கள்.
நீங்கள் போய் அஜித்தை வைத்து படம் இயக்கலாமா? என்று பலவித கேள்வி கேட்டவுடன் மிகவும் மனம் நொந்து போன வெங்கட் பிரபு உடனே அஜித்தை சந்திப்பதற்கு சென்றிருக்கின்றார். அஜித்தை பார்த்து இந்த படத்தை நான் எடுக்கவில்லை என்று கூறி சோசியல் மீடியாவில் அவரை திட்டியதை காண்பித்திருந்தார். உடனே அஜித் சத்தம் போட்டு சிரித்தாராம்.
பலர் பலவிதமாக கூறலாம். ஆனால் உங்கள் கதை மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா? என்று கேட்ட உடனே எனக்கு இருக்கின்றது என வெங்கட் பிரபு கூற, அப்போது உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. கட்டாயம் இப்படம் நல்ல வரவேற்பு பெறும் என்று அவர் தெரிவித்திருந்தார். அதன் பிறகு இப்படம் எடுக்கப்பட்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அஜித்தின் கேரியரில் ஒரு முக்கிய படமாக மங்காத்தா படம் அமைந்திருந்தது. இந்த தகவலை அந்த பேட்டியில் செய்யார் பாலு தெரிவித்து இருக்கின்றார்.