தலீவரே இப்ப தும்முனாத்தான் சரியா இருக்கும்… ரஜினியை விடாமல் துரத்தும் புளுசட்டை மாறன்

X
தலீவரே இப்ப தும்முனாத்தான் சரியா இருக்கும்… ரஜினியை விடாமல் துரத்தும் புளுசட்டை மாறன்

தமிழகத்தில் பெண்களின் பயணச் செலவைக் குறைக்கும் வகையில் அரசு பேருந்துகளில் இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் விஜய் கடந்த வாரம் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தர். இந்த திட்டத்தின் படி தமிழகம்முழுவதும் குறிப்பிட்ட அரசு பேருந்துகள் மற்றும் நகர் புற பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் செய்யலாம். தற்போது இந்தத் திட்டம் வெற்றிப்பயணம் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. தினசரி வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இலவச பேருந்து பயணம் காரணமாக அரசு பேருந்துகளில் பெண்களின் கூட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சில வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே பிரபல திரைப்பட விமர்சகர் புளூசட்டை மாறன் , தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் ஆட்டோ ஓட்டுநராக தோன்றும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், மகளிர் இலவச பேருந்து பயணத்தால் ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் குறைந்துள்ளதாகக் கூறப்படுவதை குறிப்பிட்டு ரஜினியை கிண்டலாக இதில் இணைத்துள்ளார்.

தலைவரே.. மகளிர் இலவச பயணம் வந்ததால ஆட்டோ ஓட்டுநர்கள் வருமானம் குறைஞ்சிடுச்சாம். இவர்களுக்காக விஜய்யை கேள்வி கேட்டு குரல் கொடுங்க. ஜெயிலர் 2 ரிலீஸ் டைம் இது. இப்ப தும்முனாத்தான் சரியா இருக்கும் என அவர் பதிவிட்டுள்ளார். பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் ஆட்டோ ஓட்டுனராக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

புளூசட்டை மாறன் பதிவிட்டுள்ள இந்த நையாண்டிக் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.