கடனில் இருந்து காப்பாற்றியவர்! விஜயகாந்தை பற்றி விஜய் சொன்ன விஷயம் இதுதான்
Vijay Vijayakanth: விஜய் மற்றும் விஜயகாந்துக்கு இடையேயான அந்த நெருக்கம் பற்றி அனைவருக்குமே தெரியும். 70களின் இறுதியில் இனிக்கும் இளமை படத்தின் மூலம் சினிமாவில் எண்டிரியான விஜயகாந்த் தொடர்ந்து 5 படங்கள் தோல்வியை கொடுத்தார். 1981 ஆம் ஆண்டில் எஸ்.ஏ.சந்திரசேகர் ‘சட்டம் ஓர் இருட்டறை’ என்ற படத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்தார்.
அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தின் மூலம்தான் விஜயகாந்த் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மக்கள் மத்தியில் அடையாளம் காணப்படுகிறார். அதிலிருந்து தொடர்ந்து எஸ்.ஏ. சந்திரசேகர் விஜயகாந்தை வைத்து 19 படங்களை எடுத்தார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த விஜயகாந்துக்கு அவரது 100வது படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
இதையும் படிங்க: விடுதலை தயாரிப்பாளருக்கு வெற்றிமாறன் கொடுத்த அதிர்ச்சி!.. மீண்டும் மீண்டுமா?!..
கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் மிகப்பெரிய அந்தஸ்துக்கு உயர்ந்தார் விஜயகாந்த். அந்த நேரத்தில்தான் விஜயின் செந்தூரப்பாண்டி படத்திற்கு பெரிய பெரிய நடிகர்களின் கால்ஷீட் கேட்டும் யாரும் கொடுக்கவில்லையாம். இதைப் பற்றி மீசை ராஜேந்திரன் கூறும் போது விஜயே மீசை ராஜேந்திரனிடம் செந்தூரப்பாண்டி படத்தைப் பற்றி சில தகவல்களை பகிர்ந்தாராம்.
செந்தூரப்பாண்டி படத்திற்கு முன்புவரை ரிலீஸான விஜயின் படங்கள் சரியாக போகாததால் ஏகப்பட்ட கடனுக்கு ஆளானார்களாம் விஜயின் குடும்பம். அந்த நேரத்தில் வீட்டை விற்று கடனை அடைக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்களாம்.
இதையும் படிங்க: முக்கிய நடிகருடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ்.. ஆனா இதுவரை நடக்காத ரூட்டாம்..
அப்போதுதான் செந்தூரப்பாண்டி படத்தில் பெரிய நடிகர்களை நடிக்க வைத்து அதன் மூலம் கிடைக்கும் வசூல் தொகையை வைத்து கடனை அடைக்கலாம் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் நினைக்க ஆனால் எந்த நடிகர்களும் நடிக்க முன்வரவில்லையாம்.
கடைசியாக விஜயகாந்திடம் போய் எஸ்.ஏ.சந்திரசேகர் அணுகியிருக்கிறார். அப்போது மிகவும் பீக்கில் இருந்தார் விஜயகாந்த். இருந்தாலும் சந்திரசேகருக்காக செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் நடித்துக் கொடுக்க அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட். வசூலிலும் சாதனை படைக்க அதன் பிறகே கடனை அடைத்தார்களாம் விஜயின் குடும்பம். இதை சொல்லி விஜய் ‘விஜி அண்ணாவுக்கு நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன்’ என மீசை ராஜேந்திரனிடம் அப்போது கூறினாராம்.
இதையும் படிங்க: கூலி படத்திலும் மல்ட்டிஸ்டார் கூட்டணியா? ஆனா இந்த முறை வச்சதுதான் செம ட்விஸ்ட்டு!..