Cinema News
லியோ ஆடியோ லாஞ்சே வேண்டாம்னு சொன்ன விஜய்?.. எல்லாத்துக்கும் காரணம் ஏ.ஆர். ரஹ்மான் தானா?..
வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி நடிகர் விஜயின் லியோ ஆடியோ லாஞ்ச் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில், தற்போது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவே நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஸ்கின், அனுராக் காஷ்யப், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் லியோ திரைப்படம் தாறுமாறாக உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: ஒத்த டவலை சுத்திக்கிட்டு நிக்கும் பொன்னியின் செல்வன் நடிகை!.. ஜூம் பண்ணி தூக்கத்தை கெடுத்த பாய்ஸ்!..
ஆனால், நடிகர் விஜயின் படங்கள் என்றாலே ரிலீஸ் சமயத்தில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து வருவதை கடந்த சில ஆண்டுகளாகவே பார்த்து வருகிறோம். லியோ படத்திற்கும் சென்சார் முதல் ஃபர்ஸ்ட் சிங்கிள் சர்ச்சை வரை ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெறும் என முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர், சில சிக்கல்கள் காரணமாக சென்னையிலேயே லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தி விடலாம் என படக்குழு முடிவு செய்தது.
இதையும் படிங்க: எஸ்.ஏ.சி-க்கு நடந்த ஆபரேஷன்!.. பதறி ஓடிய விஜய்!.. அப்பா – மகன் இணைந்த ஸ்டோரி இதுதானாம்!..
வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தி விட்டு, அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை தமிழ்நாடு தொடங்கி உலகம் முழுக்க பல இடங்களில் புரமோஷனை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடைபெறுமா என்கிற கேள்வி தற்போது சினிமா வட்டாரத்தில் கிளம்பியுள்ளது. அதற்குக் காரணம், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை வெளியீட்டு விழாவில் நடந்த மோசடிதான் என்கின்றனர்.
இதையும் படிங்க: அப்பா அம்மாவுடன் பஞ்சாயத்து ஓவர் என நிரூபித்த விஜய்!.. ஆனால், அது மட்டும் இன்னும் புகையுதே!..
போலி டிக்கெட், கியூ ஆர் கோடு சர்ச்சை, அதிக ரசிகர்கள் கூடுவதற்கு அனுமதி மறுப்பு, எல்லாத்தையும் தாண்டி ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தினால் அதில் சர்ச்சை உண்டு பண்ண சில சதித் திட்டங்களும் போடப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரியை நடத்திய ஏ சி டி சி நிறுவனம் தான் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் நடத்த போவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தான், நடிகர் விஜய் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவே வேண்டாம் என்கிற முடிவுக்கு தற்போது வந்து இருப்பதாக செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் லலித் குமார் எந்தவித சிக்கலும் இல்லாமல் டியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்திக் காட்டுகிறேன் என்கிற உறுதியை விஜய்க்கு கொடுத்திருப்பதாகவும் ஆனால் இதுவரை விஜயிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை என்றே தகவல்கள் வெளியாகி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.