latest news

தள்ளிப்போகும் Irandu Vaanam ரிலீஸ்… இதுக்கு Jailer 2 தான் காரணமா?

‘இரண்டு வானம்’ படம் வருகிற அக்டோபர் 23-ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது.

‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள லேட்டஸ்ட் படம் தான் ‘இரண்டு வானம்’. இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘ஜன நாயகன்’ புகழ் மமிதா பைஜு நடித்திருக்கிறார்.

இந்த படத்தை இயக்கியிருப்பது ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் தான். சமீபத்தில் தான் இப்படத்தை வருகிற அக்டோபர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்போவதாக விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் அறிவித்திருந்தார்.

தற்போது, இதன் ரிலீஸை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக்கு காரணம் அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ தான் என்று சொல்லப்படுகிறது.

இது ரஜினி படம் என்பதால், ஒரு வாரத்துக்கு பிறகும் தியேட்டரில் நன்றாக ஓட வாய்ப்பு இருப்பதால், நம்ம படத்துக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் வந்துவிடுமோ? என்று நினைத்து தான் ‘இரண்டு வானம்’ டீம் இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டதாம்.

Author
siva ✓