Cinema News
கோட் படத்தின் ஓடிடி உரிமை இவ்வளவு கோடியா?!.. ஆனாலும் லியோவை விட கம்மிதான்!..
விஜய் ஒரு படத்தில் நடித்தாலே அது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாக்கப்படும். லோகேஷ் கனகராஜ் – விஜய் இருவரும் இணைந்து உருவான லியோ படத்திற்கு இதுவரை எந்த தமிழ் படத்திற்கும் இல்லாத எதிர்பார்ப்பு இருந்தது. அதனாலேயே அப்படம் கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானது.
இப்போது விஜய் வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். லியோ படம் மாதிரி ஆகிவிடக்கூடாது என்பதற்காக இப்படம் பற்றிய எந்த தகவலும் இதுவரை படக்குழு வெளியிடவில்லை. விஜய், அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார், அதில் ஒரு வேடம் 20 வயது இளைஞன் என்று மட்டும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: இளையராஜாவோட உண்மை கதையை அப்படியே எடுத்தா அவ்வளவுதான்!.. பகீர் கிளப்பும் பிரபலம்!..
அதோடு, இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவும் நிலைக்கு வந்துவிட்டது. இந்த மாத இறுதியோடு காட்சிகள் முடிக்கப்படும் என சொல்லப்பட்டாலும், ரஷ்யாவில் எடுக்க திட்டமிட்டிருந்த சில காட்சிகளை என்ன செய்வார்கள் என்பது தெரியவில்லை.
ஒருபக்கம் இந்த படத்தின் ஓடிடி உரிமைகள் இதுவரை விற்கப்படாமல் இருந்தது. அதற்கு காரணம் பெரிய படங்களை அதிக விலை கொடுத்து வாங்க ஓடிடி நிறுவனங்கள் தயாராக இல்லை. ஏனெனில் பல கோடிகள் கொடுத்து வாங்கி பெரிய லாபம் கிடைக்கவில்லை. அதோடு, 2025ம் வருடத்தில் ஒளிபரப்பாகும் படங்களின் லிஸ்ட்டும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது.
இதையும் படிங்க: மதவெறியில் ஊறிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்… கிடைத்த வாய்ப்பில் எல்லாம் காட்டிய கோர முகம்!…
எனவே, நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற ஓடிடி நிறுவனங்கள் 2025ம் வருடத்திற்கான கதவை சாத்திவிட்டன. ஆனாலும் விஜய் படம் என்பதால் ஒரு கதவை திறந்திருக்கிறார்கள். லியோ படம் 125 கோடிக்கு விலை போனதால் கோட் படத்திற்கு ரூ.160 கோடி என ஏஜிஎஸ் நிறுவனம் விலை வைத்தது.
அவ்வளவு கொடுக்க முடியாது ரூ.90 கோடி கொடுக்கிறோம் என நெட்பிளிக்ஸ் சொல்ல, பேச்சுவார்த்தையின் முடிவில் கோட் படத்தின் ஓடிடி உரிமை ரூ.110 கோடிக்கு விலை போயிருக்கிறது. விஜய் படத்திற்கு இவ்வளவுதான் என்றால் சிறிய நடிகர்களின் படங்கள் இன்னும் குறைவான விலைக்கு போகும் என கணிக்கப்படுகிறது.