காலங்காலமாக இந்த நடிகருக்கு நன்றிக்கடன் பட்டவன் நான்! யாரை சொன்னார் தெரியுமா வடிவேலு?

Published on: April 3, 2024
vadi
---Advertisement---

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் இன்று நகைச்சுவையில் கொடி கட்டி பறப்பவர் நடிகர் வடிவேலு. சமீபகாலமாக அவரின் நகைச்சுவை எடுபட வில்லை என்றாலும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை நகைச்சுவையில் அவர்தான் கிங். கிட்டத்தட்ட நாகேஷுக்கு இருந்த புகழ் வடிவேலுவுக்கும் இருந்தது என சொன்னால் கூட தவறில்லை. நாகேஷை போலவே உடல் மொழியாலும் முக பாவனையாலும் நகைச்சுவை செய்து சிரிக்க வைப்பதில் வல்லவராக இருந்தார் வடிவேலு.

சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து ஒரு சிறந்த நடிகர் என்ற பெயரையும் வாங்கிவிட்டார். நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வடிவேலுவை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலுவுக்கு அப்படிப்பட்ட ஒரு வெயிட்டான கதாபாத்திரம் கிடைத்ததற்கு முக்கிய காரணமாக அமைந்ததே தேவர் மகன் திரைப்படம்தான்.

இதையும் படிங்க: கவுண்டமணியை ஏமாத்தி அந்த படத்தை எடுத்தோம்!… பல வருடங்கள் கழித்து சொன்ன இயக்குனர்…

அதுவரை நகைச்சுவை கதாபாத்திரத்திலேயும் துணை நடிகராகவும் நடித்து வந்த வடிவேலுவை தேவர் மகனில் அப்படிப்பட்ட ஒரு கேரக்டரை கொடுத்து மக்கள் அறிய செய்தவர் கமல். அதனால் தேவர் மகன் திரைப்படத்தை பற்றியும் கமலை பற்றி ஒரு பேட்டியில் வடிவேலு கூறியதை சித்ரா லட்சுமணன் அவருடைய யுடியூப் சேனலில் தெரிவித்திருக்கிறார்.

பல நூறு படங்களில் நான் நடித்திருந்தாலும் எனக்கு ஒரு தனி அங்கீகாரம் கொடுத்த திரைப்படம் என்றால் அது தேவர் மகன் தான்.அந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் கமல்ஹாசன் எனக்கு கொடுத்த நல்ல வாய்ப்பு அது. அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கு இனி அமையுமா என தெரியவில்லை.

இதையும் படிங்க: உங்க வாய் சும்மா இருக்க மாட்டிங்குது கோபி… கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமே!

ஒரு பக்கம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இன்னொரு பக்கம் கமல்ஹாசன்.இவர்களுக்கு நடுவே நடந்து வரும் சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கியவர் கமல். நான் வளர்ந்து வரும் சமயத்திலே இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்த கமலுக்கு நான் காலங்காலமாக நன்றிக் கடன் பட்டவனாக இருக்கிறேன். இருப்பேன்.

சிவாஜியை பொறுத்தவரை டூரிங் டாக்கீஸில் மண்ணை குவித்து அதன் மேல் உட்கார்ந்து சிவாஜியை அண்ணாந்து பார்த்தவன் நான். அப்படி பட்ட மகா கலைஞனோடு ஸ்கீரினை பகிர்ந்தது என்னுடைய பாக்கியம். இனி இது போன்ற வாய்ப்பு கிடைக்குமா சொல்லுங்கள் என வடிவேலு கூறியிருந்தாராம்.

இதையும் படிங்க: முத்துவை வீட்டை விட்டு துரத்த ரெடியான விஜயா… ஷாக் கொடுக்க போகும் அண்ணாமலை!…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.