Cinema News
கவுண்டம்பாளையம் பட விழாவில் சின்னக்கவுண்டர் பட இயக்குநர் சொன்ன மேட்டர்!.. இதுவும் சாதிய படமா பாஸ்?..
நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சின்னக்கவுண்டர் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் நிகழ்ச்சியில் மேடை ஏறி பேசும்போது பல விஷயங்களை கூறியுள்ளார்.
இயக்குனர் பேரரசு போல ரஞ்சித்தும் இந்தப் படத்துக்கு கவுண்டம்பாளையம் என ஊர் பெயரை மட்டும் தான் வைத்துள்ளார் என்றும் இதை சாதிய படமாக பார்க்கக்கூடாது என்றும் உதயகுமார் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: என்னடா இது ’மாமன்னன்’ மினி வெர்ஷனா இருக்கே?.. உறியடி விஜயகுமாரின் ‘எலக்சன்’ டிரெய்லர் ரிலீஸ்!..
சின்னக் கவுண்டர் படத்தைத் தான் இயக்கும் போது எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை. இந்த தலைப்பை ஏன் வைக்கின்றீர் என யாரும் கேட்கவில்லை. அதே போல படத்தைப் பார்த்துவிட்டு மக்கள் வெள்ளி விழா படமாக மாற்றினர். அதை தவிர்த்து யாரும் இந்த படத்தை பார்த்து விட்டு சாதிய சண்டை போடவில்லை என்றார்.
ஆனால் படத்தின் டிரைலரில் முழுக்க முழுக்க இந்த படம் சமீபத்தில் ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியான காடுவெட்டி படத்தைப் போலவே சாதியப் படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இயக்குனர் பேரரசு நம்ம வீட்டு பெண்களை யாராவது ஏதாவது செய்தால் பார்த்துக்கொண்டு சும்மா எப்படி இருக்க முடியும் என கொந்தளித்து பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: அட இருங்கப்பா… அவங்களாம் பாவம் இல்லையா… கில்லி ரீரிலீஸின் மொத்த வசூலால் அதிரும் கோலிவுட்….
நாடக காதலுக்கு எதிரான படமாகவே இந்த படத்தை உருவாக்கியிருப்பதாக நடிகரும் இயக்குநருமான ரஞ்சித் பேசும் போது வெளிப்படையாக கூறியுள்ளார். படத்தின் மேக்கிங்கை பார்த்தால் ரொம்பவே மோசமாக உள்ளது. இந்த படத்தை எல்லாம் தியேட்டரில் வெளியிட்டால் மக்கள் எப்படி வரவேற்பு கொடுப்பார்கள் என யூடியூபில் வெளியாகி இருக்கும் டிரெய்லருக்கு கீழ் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.