மலேசியாவின் குரலில் ரஜினிக்கே தெரியாமல் பாட்டு… அப்புறம் நடந்த சிக்கல்தான் ஹைலைட்!

Published On: May 16, 2024
Rajni MSV
---Advertisement---

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் குரலுக்கு கனகச்சிதமாகப் பொருந்துவது மலேசியா வாசுதேவன் குரல் தான். வெண்கலக்குரலுக்குச் சொந்தக்காரரான இவரது பாடல்கள் எல்லாமே ரசிக்கத்தக்கவை. உதாரணத்திற்கு மனிதன் படத்தில் ஓபனிங் சாங். மனிதன் மனிதன் இவன் தான் மனிதன் என்று வரும். சந்திரபோஸ் இசையில் இந்தப் பாடலைக் கேட்கும்போது நம்மையும் அறியாமலேயே நம் வாய் முணுமுணுக்கும்.

ரஜினிதான் உண்மையிலேயே பாடினாரோ என்று சந்தேகம் வரும். இந்தப் பாடல் ரெக்கார்டிங் ஆகி ஓடிக்கொண்டு இருந்ததாம். அப்போது இந்தப் பாட்டை நம்ம படத்தில் வைத்தால் என்ன என்று ரஜினி கேட்டாராம்.

இதையும் படிங்க… சூர்யாவின் அடுத்த படத்துக்கு ஆஸ்கார் பட பிரபலமா?… விட்டத பிடிக்க செம ப்ளானா இருக்கே…

அதன்பிறகு தான் அவருக்கு இது நம்ம படத்தோட பாட்டு தான் என்ற விஷயமே தெரிந்ததாம். முதலில் இந்தப் பாடலைப் படத்தில் எந்த இடத்தில் வைப்பது என்று சிக்கல் வர, கடைசியாகத் தான் டைட்டில் சாங்காக வைத்தார்களாம்.

அதே போல மலேசியா வாசுதேவனின் குரலில் ‘தண்ணீ கருத்திருச்சி’ பாடலையும் யாராலும் மறக்க முடியாது. கமல், ரஜினி இணைந்து நடித்த இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் தான் இந்தப் பாடல் வருகிறது. அப்போது வானொலிகளில் குத்துப்பாடல் என்றால் அது இதுதான்.

அதுமட்டுமா, ஆகாய கங்கை என்ற காதல் மெலடிப் பாடல் கேட்க கேட்க இதமாக இருக்கும். பட்டு வண்ணச் சேலைக்காரின்னு மலேசியா வாசுதேவன் இழுத்துப் பாடுகையில் பரவசம் வந்து தொற்றிக் கொள்ளும்.

Manithan
Manithan

கூடையில கருவாடு என்றால் இவரது குரல் துள்ளி விளையாட ஆரம்பித்து விடும். இது ஒரு விசித்திரமான குரல். முதல் மரியாதை படத்தில் ‘பூங்காற்று திரும்புமா’ என அற்புதமாகப் பாடியிருப்பார். பாரதவிலாஸ் தான் இவரது முதல் படம். அதன்பிறகு வாய்ப்பு வராமல் இருந்த இவருக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தவர் இளையராஜா.

அதுவும் சோதனைப்பாடலாக 16 வயதினிலே படத்தில் இருந்து ‘ட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடல் இவருக்குக் கிடைத்ததாம். அதிலும் தனது திறமையைக் கொண்டு செம மாஸ் காட்டிவிட்டார். அதே ராகத்தில் ‘காதல் வந்திரிச்சி’ என்று கல்யாணராமன் படத்தில் தனது குரலை மாற்றிப் பாடியிருப்பார்.

படத்திலும் வில்லனாக வந்து கெத்தைக் காட்டினார். ஒரு கைதியின் டைரியில் நிலா நிலா ஓடி வா என அம்பிகாவிடம் இவர் பாடிக்காட்டுகையில் இப்படியும் ஒரு வில்லனா என நம்மை மிரட்டி விடுவார். நடிப்போடு நின்றால் இவர் தப்பித்து இருப்பார். ஆசை சும்மா விடுமா? தயாரிப்பிலும் கொடிகட்டிப் பறக்கலாம் என்று நினைத்தார். அதில் இருந்து அவரால் மீள முடியவில்லை. அதன்பிறகு நீண்ட காலமாகப் படங்களும் இல்லாமல் இருந்தார். தொடர்ந்து பாடுவதையே நிறுத்திவிட்டாராம்.