Connect with us

Cinema News

வருகிறது SMS 2, அடுத்த காதலர் தின கொண்டாட்டத்திற்கு ரெடியா இருங்க..!

அடுத்த காதலர் தினமா? படம் வந்தே 15 ஆண்டுகள் ஆகிடுச்சே…

2009ல் ஜீவா, அனுயா, சந்தானம், சத்யன் நடிப்பில் இளமைத் துள்ளலுடன் காதலர்களுக்காக வெளிவந்த படம் சிவா மனசுல சக்தி. ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தை இயக்கியவர் எம்.ராஜேஷ். இவரது முதல் படம் இதுதான். இசை அமைத்தவர் யுவன் சங்கர் ராஜா.

படத்தில் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். எம்ஜிஆர் இல்லீங்க, ஒரு அடங்காப்பிடாரி, எப்படியோ மாட்டிக்கிட்டேன், ஒரு கல், தித்திக்கும் தீயாய் என அனைத்துப் பாடல்களும் துள்ள வைப்பவை. ஜீவாவின் திரையுலகப் பயணத்தில் இந்தப் படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

இந்தப் படம் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாகக் காதலர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். இந்தப் படத்தின் வெற்றி இப்போது படத்தின் 2ம் பாகத்தை எடுக்கத் தூண்டியுள்ளது. அதனால் 2 கே கிட்ஸ்களுக்கு இந்தப் படம் காதலர் தின கொண்டாட்டமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

அதே போல 80ஸ் கிட்ஸ் அடுத்த காதலர் தின கொண்டாட்டத்திற்கு இப்போதே தயாராகிக்கோங்க. இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்னன்னு கேட்பது புரிகிறது. சிலர் இன்னும் திருமணப் பந்தத்துக்குள் அடைபடாமல் இருக்கிறார்கள். அல்லவா அவர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடலாமே.

இன்னொரு விஷயம் என்னன்னா காதலர்கள் மட்டும் தான் படத்தைக் கொண்டாடணுமா? திருமணம் முடிந்தும் தம்பதியர் காதலிக்கக்கூடாதா? என்ற கேள்வியும் இதற்குப் பின்னால் எழுகிறது. எஸ்எம்எஸ் படத்தோட 2ம் பாகம் வருகிறதாம்.

சிவா மனசுல சக்தி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகமும் எடுக்க எண்ணம் இருக்கிறது. அதற்கான திரைக்கதையும் தயாராக இருக்கிறது. எழுதி இருக்கிறேன். ஜீவாவிடமும் இதுபற்றி பேசி இருக்கிறேன் என்கிறார் படத்தின் இயக்குனர் ராஜேஷ்.

இயக்குனர் ராஜேஷ் பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். குறிப்பாக பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களைச் சொல்லலாம். குறிப்பாக தற்போது ஜெயம் ரவியின் பிரதர் படத்தையும் இவர் தான் இயக்கி வருகிறார்.

அப்புறம் என்ன சட்பு புட்டுன்னு வேலையை ஆரம்பிங்க ப்ரோன்னு ரசிகர்களின் மைன்ட் வாய்ஸ் சொல்வது புரிகிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top