Connect with us
nagarjuna

Cinema News

அண்ணன் தம்பி 2 பேருக்கும் ஒரே மேடையில் கல்யாணமா?.. நாகார்ஜுனா கொடுத்த விளக்கம்!..

நாக சைதன்யாவுக்கும், அகில் அக்கினேனிக்கும் ஒரே நாளில் திருமணம் நடக்க உள்ளதாக வெளிவந்த தகவலுக்கு நாகார்ஜுனா விளக்கம் கொடுத்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர்கள் தலைமுறை தலைமுறையாக நடிகர்களாக இருந்து வருகிறார்கள். நாகார்ஜுனா அவர்களின் தந்தை ஒரு பிரபல நடிகர். அதன் பிறகு நாகார்ஜுனாவின் மகன்களும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருகிறார்கள்.

இதையும் படிங்க: Vidamuyarchi:விடாமுயற்சி டீசரில் இந்த கேரக்டரை கவனிச்சீங்களா? வேற லெவல் குக்கிங்கா இருக்கே

நாகார்ஜுனாவுக்கும் அவரின் முதல் மனைவி லக்ஷ்மிக்கும் பிறந்தவர் தான் நாகசைதன்யா. பின்னர் முதல் மனைவியை விவாகரத்து செய்த நாகார்ஜுனா நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பிறந்த மகன் அகில் அக்கினேனி. தனது இரண்டு மகன்களும் தற்போது தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர்களாக வலம் வருகிறார்கள்.

நடிகர் நாகசைதன்யா தெலுங்கில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதைத்தொடர்ந்து நாகசைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.

வரும் 4-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கிடையில் நாகசைதன்யாவின் தம்பி அகில் அகினேனிக்கும், ஓவியர் ஜெய்னப் ராவ்த்ஜிக்கும் நவம்பர் 26ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இதனால் நாகார்ஜுனா வீட்டில் கல்யாணம் தொடர்பான நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றது.

akhil

akhil

இந்நிலையில் அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே தேதியில் ஒரே மேடையில் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது. இந்த தகவலுக்கு நாகார்ஜுனா விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘இரண்டு திருமணமும் ஒரே நாளில் நடக்காது. அகிலின் திருமணம் அடுத்த வருடம் நடைபெறும். அகிலை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

அகிலுக்கு மனைவியாக போகும் ஜெய்னப் ஒரு நல்ல பெண். அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைவதை நினைத்து சந்தோஷமாக இருக்கின்றேன். அகிலுக்கு முன்னதாகவே நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமணம் நடைபெறாமல் போய்விட்டது. இதையடுத்து அவர் வாழ்வில் மீண்டும் காதல் வந்திருக்கின்றது. இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அந்த காதலை நாங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றோம்.

இதையும் படிங்க: கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா?.. அமரன் இயக்குனரிடம் விஜய் சொன்ன விஷயம்!..

முதலில் நாகசைதன்யா திருமணம் நடைபெறும்’ என்று நாகார்ஜுனா கூறியிருக்கின்றார். வரும் டிசம்பர் 4-ம் தேதி அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தாத்தா சிலை முன்பு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கின்றார் நடிகர் நாகசைதன்யா. குடும்ப செண்டிமெண்ட் காரணமாக நாகசைதன்யா திருமணம் தற்போது அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
ramya suresh
Continue Reading

More in Cinema News

To Top