‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருக்கும் புதிய படம் ‘ஜெயிலர் 2’. இதை இயக்குநர் நெல்சன் தான் இயக்கியிருக்கிறார்.

இதில் முக்கிய கேரக்டர்களில் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சமீபத்தில், இதன் 2 பாடல்கள் ரிலீஸ் ஆனது. தற்போது, அனிருத் இசையில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் ட்ராக் ‘One Name’-ஐ ரிலீஸ் செய்துள்ளனர்.

இப்பாடல் ரஜினி ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் அள்ளி வருகிறது. Jukebox-ஐ நாளையும், ட்ரெய்லரை அக்டோபர் 5-ஆம் தேதியும், படத்தை அக்டோபர் 15-ஆம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.