விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான படம் பத்தா. பிரபல இயக்குனர் அட்லி தயாரித்துள்ள இந்த படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் படத்தினை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ், சிறுவன் சாய் பிரித்விராஜ் என பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் புளு சட்டை மாறன் டஹ்னது யூடியூப் பக்கத்தில் பத்தா படத்தின் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,

விஜய் சேதுபதி உள்ளூரில் சாராயம் காய்ச்சும் ரௌடியாக உள்ளார். அவர எதிர்த்து யார் நின்றாலும் அடித்து துவைத்துவிடுவார். அவரைக் கண்டால் ஊரே பயப்படும். அவரை பார்த்து ஒரு 3ம் வகுப்பு மாணவனும் பயப்படுவான். காரணம் அந்த சிறுவன் முன் ஒரு சம்பவம் செய்துவிடுவார் விஜய் சேதுபதி. ஆனால் அந்த பயமே அந்த சிறுவனை விஜய் சேதுபதிக்கு எதிராக ஒரு தப்பு செய்ய வைத்துவிடும். அந்த தப்பு என்ன? அதற்கு பின்பு என்ன ஆச்சு என்பதுதான் இந்த படத்தின் கதை
படம் ஒரு வித்யாசமான கதை களத்தை எடுத்துக் கொண்டாலும் இடைவேளைக்கு முன்பு வரை மிகவும் மெதுவாக செல்கிறது. மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற ஷட்டர் படத்தின் ஐடியாவை வைத்து இந்த படத்தை செய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அந்த படத்திலிருந்த பதட்டம் இந்த படத்தின் காட்சிகளில் இல்லை. ஆனால் போர் அடிக்கவில்லை.

இரண்டாம் பகுதி யும் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் எமோஸனல் காட்சிகள், ஆங்கங்கே நகைச்சுவை காட்சிகள் என படத்தை அழகாகவே கொண்டு சென்றுள்ளனர். அதிலும் கடைசி சில நிமிட காட்சிகள் நன்றாகவே உள்ளது. படம் விட்டு வெளியே வரும்போது ஒரு நிறைவான படம் பார்த்த திருப்தியை கொடுத்தது.
இந்த படம் நன்றாக இருந்ததற்கு காரணம் படத்திற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட பீரியட், அதற்கான உழைப்பும் நன்றகவே செய்துள்ளனர். இயக்குனர் ஸ்கிரிப்ட் ஒர்க் நன்றாகவே செய்துள்ளார். விஜய் செதுபதி, லிஜோ என அனைவரும் நன்றாகவே செய்துள்ளனர். குறிப்பாக சிறுவன் சாய் அற்புதமாக நடித்துள்ளான்.
மொத்ததில் ஒரு ரௌடி எப்படி மனம் மாறுகிறான் என்பதை வெட்டு குத்து என சொல்லாமல் அழகாக ஒரு பீல் குட் வடிவில் சொல்லியிருக்கிறார்கள். அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று புளு சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.




