Cinema History
கமல்ஹாசனையே பயப்பட வைத்த கவுண்டமணி!.. வேற ரூட்டில் காயை நகர்த்திய உலக நாயகன்..
Goundamani: கவுண்டமணி என்றால் நக்கல்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடன் எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும் சரி.. மரியாதை இல்லாமல்தான் பேசுவார். மேட்டுக்குடி படத்தில் ஜெமினி கணேசனையே கார்த்திக்கிடம் ‘அவன், இவன்’ என பேசுவார். அவரை பொறுத்தவரை செந்திலுக்கும் கொடுக்கும் மரியாதையைத்தான் ரஜினி, கமலுக்கும் கொடுப்பார்.
இதனாலேயே பெரிய நடிகர்கள் கவுண்டமணியுடன் நடிக்க யோசிப்பார்கள். அப்படியே நடித்தாலும் இயக்குனரை அழைத்து கவுண்டமணி ‘என்னை அசிங்கப்படுத்துவது போல வசனம் பேசக்கூடாது’ என கண்டிஷன் போட்டுதான் நடிப்பார்கள். ஆனால், அதையும் தாண்டி கேப் கிடைக்கும்போது கோல் போட்டுவிடுவார் கவுண்டமணி.
இதையும் படிங்க: கவுண்டமணி அப்பேற்பட்ட ஆளுதான்! விசித்ரா சொன்னதையும் தாண்டி அதெல்லாம் நடந்திருக்கு.. போட்டுடைத்த பிரபலம்
சில சமயம் எடிட்டிங் பணியிலும் நீக்க முடியாதபடி வசனங்களை பேசிவிடுவார். இதனால் ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் இயக்குனரிடம் இதுபற்றி பேசிவிட்டுதான் கவுண்டமணியுடன் நடிப்பார்கள். எவ்வளவு பெரிய நடிகர் என்றாலும் சரி.. சகட்டு மேனிக்கு மரியாதை இல்லாமல் பேசிவிடுவார் கவுண்டமணி.
அதோடு, பெரிய நடிகர்களை ‘வாங்க போங்க’ எனவும் பேசமட்டார். ‘என்னப்பா.. எப்படி இருக்க?’ என்று ஒருமையில்தான் பேசுவார். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஒருமுறை கவுண்டமணி பற்றி பேசிய போது ‘அவருக்கு காந்தி வேடம் கொடுத்தாலும் நேருவை ‘டே நாயே’ என்றுதான் கூப்பிடுவார்’ என சொன்னார். அதுதான் கவுண்டமணி.
இதையும் படிங்க: கவுண்டமணியை ஒதுக்கிய ரஜினி, கமல்!.. கொஞ்சம் அசந்தா இமேஜை காலி பண்ணிடுவாரு!..
கமல் நடிப்பில் 1987ம் வருடம் வெளியான திரைப்படம்தான் ‘பேர் சொல்லும் பிள்ளை’. இந்த படத்தில் நடிக்கும்போது கவுண்டமணி எப்படியும் தன்னை நக்கலடித்து பேசுவார் என தெரிந்த கமல் இயக்குனரிடம் ‘கவுண்டமணிக்கு வெறும் காமெடி மட்டும் கொடுக்காதீர்கள். அவர் வில்லத்தனம் செய்வது போலவும் காட்சி வையுங்கள்’ என்று சொன்னாராம்.
அதாவது அப்படி வேடம் கொடுத்தால் கவுண்டமணி தன்னை நக்கடிக்க மாட்டார் என கணக்கு போட்டிருக்கிறார் உலக நாயகன். இயக்குனரும் கவுண்டமணிக்கு அந்த படத்தில் அப்படி ஒரு வேடத்தையே கொடுத்தார். எஜமான் படத்தில் நடிக்கும்போது ‘கவுண்டமணி என்னை மட்டம் தட்டுவது போல் பேசக்கூடாது’ என இயக்குனரிடம் சொல்லிவிட்டுதான் நடித்திருக்கிறார் ரஜினி.
அப்படி ஒரு பயத்தைத்தான் கவுண்டமணியை உருவாக்கி வைத்திருந்தார்…