Homelatest newsவீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு விஜய் கொடுத்த பரிசு!.. நெகிழ்ந்து போன இயக்குனர்!…

வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு விஜய் கொடுத்த பரிசு!.. நெகிழ்ந்து போன இயக்குனர்!…

விஜய்க்கு நிறைய படங்கள் சூப்பர் ஹிட் என்றாலும் அதில் முக்கியமானவை திருப்பாச்சி, சிவகாசி ஆகிய இரண்டு படங்கள். இந்த இரண்டு படங்களுமே பக்கா கமர்சியல் மசாலா திரைப்படங்களாக உருவாகியிருந்தது.. இந்த இரண்டு படங்களையுமே பேரரசு இயக்கியிருந்தார். விஜயை வைத்து பேரரசு இயக்கிய முதல் திரைப்படம் திருப்பாச்சி. இந்த படம் 2005 பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்..

திருப்பாச்சி ஹிட் என்பதால் மீண்டும் பேரரசு இயக்கத்தில் நடித்தார் விஜய். அப்படி 2005ம் வருடம் நவம்பர் மாதம் வெளியான திரைப்படம்தான் சிவகாசி. இந்த படத்தில் விஜய், பிரகாஷ்ராஜ், அசின் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படமும் சூப்பர் ஹிட். எனவே அப்போது பேரரசு முக்கிய கமர்சியல் இயக்குனராக பார்க்கப்பட்டார். அதன்பின் அவர் விஜயகாந்தையெல்லாம் வைத்து படமெடுத்தார்.

அதேபோல அஜித்தை வைத்து திருப்பதி என்கிற படத்தையும் பேரரசு இயக்கினார். அது சிவகாசி, திருப்பாச்சி படங்கள் போல வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய பேரரசு ‘சிவகாசி படம் சூப்பர் ஹிட் அடித்தது.. அப்போது திடீர்னு ஒரு நாள் விஜய் சார் என்னை வீட்டுக்கு இரவு உணவு சாப்பிட கூப்பிட்டார்.. நானும் அவர் வீட்டுக்கு சென்றேன். அவர் கையாலே எனக்கு தோசை சுட்டுக் கொடுத்தார்..

நான் வீட்டிலிருந்து வெளியே வந்த போது என் கையில் ஒரு சாவியை கொடுத்து ‘இது உங்களுக்குதான்.. என்னுடைய பரிசு’ என்றார். வெளியே ஒரு புது கார் நின்று கொண்டிருந்தது.. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை.. வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு ஒரு காரை பரிசாக கொடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.. அப்படி ஒரு தங்கமான மனசுக்காரர்தான் தளபதி’ என்று பேசியிருக்கிறார்..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments