இப்படி ஒரு பதிவை போடுவாங்கனு எதிர்பார்க்கல! ஐஸுவின் செயலால் மனமுடைந்த அம்மா

BiggBoss Aishu: பிக்பாஸ் இந்த சீசன் மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அதுவும் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்ததில் இருந்து இந்த சீசன் மீது இன்னும் அதிகமான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியிருக்கிறது. காரணம் சரியான காரணத்தோடு பிரதீப்பை அனுப்பவில்லை. பிரதீப்பிற்கு கிடைக்க வேண்டிய நியாயம் கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என விசித்ராவும் அர்ச்சனாவும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதனால் வீட்டில் பெரிய பிரளயமே நடந்து வருகிறது. இதையும் படிங்க: ஈஸியா விட்டுக்கொடுத்துட்டாரு! நானா இருந்தா விட்டுக் […]

By :  Rohini
Update: 2023-11-09 01:45 GMT

aishu

BiggBoss Aishu: பிக்பாஸ் இந்த சீசன் மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அதுவும் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்ததில் இருந்து இந்த சீசன் மீது இன்னும் அதிகமான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியிருக்கிறது.

காரணம் சரியான காரணத்தோடு பிரதீப்பை அனுப்பவில்லை. பிரதீப்பிற்கு கிடைக்க வேண்டிய நியாயம் கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என விசித்ராவும் அர்ச்சனாவும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதனால் வீட்டில் பெரிய பிரளயமே நடந்து வருகிறது.

இதையும் படிங்க: ஈஸியா விட்டுக்கொடுத்துட்டாரு! நானா இருந்தா விட்டுக் கொடுக்கவே மாட்டேன் – கார்த்திக் பற்றி ரஜினி பெருமிதம்

ஒரு கட்டத்தில் பூர்ணிமாவும் மாயாவும் சேர்ந்து இவர்கள் கொடுக்கிற குடைச்சலுக்கு பேசாமல் பிரதீப்பே இந்த வீட்டில் இருந்திருக்கலாம். அவரையாவது சமாளித்து விடலாம். இவங்கள முடியல என விசித்ராவையும் அர்ச்சனாவையும் பற்றி பேசி வரும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது.

இன்னொரு பக்கம் ஐஸு மற்றும் நிக்‌ஷன். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் ஒரு டஃப் போட்டியாளர்களாகவே பார்க்கப்பட்டார்கள். ரவீனா, மணியை பற்றி ஐஸு பேசாத பேச்சே இல்லை என்று சொல்லலாம். ஆனால் அதைத்தான் இப்போது ஐஸுவும் நிக்‌ஷனும் பண்ணுகிறார்கள்.

இதையும் படிங்க: லோகேஷுக்கு அடுத்து இவர்தான்!. ரஜினி டிக் அடித்த இயக்குனர்.. தலைவர் 172 பரபர அப்டேட்..

ஒரு கட்டத்தில் வரம்பு மீறி இருவரும் கண்ணாடி வழியாக முத்தமழையை பகிர்ந்து கொள்ளும் காட்சி வைரலானது. அதன் பிறகு சீக்ரெட் அறையில் இருவர் மட்டும் உட்கார்ந்து முத்தம் சத்தம் மட்டுமே கேட்டது. நாளுக்கு நாள் இவர்கள் எல்லையை மீறி நடந்து கொள்கிறார்கள்.

ஏற்கனவே ஐஸு மீது அவரது குடும்பம் பயங்கர கோபத்தில் இருந்ததாக தெரிந்தது. இதில் ஐஸூவின் அம்மா சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் ‘ நீ நீயாவே இரு ஐஸு. இப்ப இருக்கிற ஐஸு எங்களுக்கு வேண்டாம். உன்னுடைய உண்மையான கண்களால் எது உண்மை? எது பொய் என ரியலைஷ் பண்ணு’ என்று அந்த கமெண்டில் பதிவிட்டிருக்கிறார் ஐஸூவின் அம்மா.

இதையும் படிங்க: சிவகுமாருக்கு அவர் தந்தை சொன்ன ஜோசியம் என்ன தெரியுமா?.. அச்சு அசலாக அப்படியே நடந்ததாம்..!

Tags:    

Similar News