23 அடி பள்ளமா? ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் நடந்த விபத்துக்கான உண்மையான காரணம் இதுதான்!..

Vidamuyarchi: அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தப் படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஏகப்பட்ட பிரச்சினைகளை கடந்துதான் படப்பிடிப்பு நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட 60% படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பை தேர்தலுக்கு பிறகு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் திடீரென விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஏற்பட்ட விபத்து சம்பந்தமான வீடியோவை அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் […]

;

By :  Rohini
Published On 2024-04-07 07:30 IST   |   Updated On 2024-04-07 07:30:00 IST

ajith

Vidamuyarchi: அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தப் படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஏகப்பட்ட பிரச்சினைகளை கடந்துதான் படப்பிடிப்பு நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட 60% படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பை தேர்தலுக்கு பிறகு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் திடீரென விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ஏற்பட்ட விபத்து சம்பந்தமான வீடியோவை அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அதுமட்டுமில்லாமல் அஜித் மீதும் பலர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.

இதையும் படிங்க: நடிகர் திலகத்தையே அசர வைத்த நடிகர்கள்… அட இவ்வளவு பேர் இருக்காங்களா?!…

உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை சுரேஷ் சந்திராவிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட போது சமீபத்தில் அஜித் கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட வீடியோ வைரலானது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த வீடியோ வைரலானதில் இருந்து அஜித்தை பலரும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் ஒரு வேலையாக அஜித் ஐதரபாத்தில் இருக்கும் ஹோட்டலில் தங்கியிருந்தாராம்.

நடராஜன் வேறொரு ஹோட்டலில் தங்கியிருந்தாராம். அஜித் இங்கு இருப்பதை அறிந்த நடராஜன் அஜித்துக்கும் இவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான நபரை வைத்து அஜித்தை பார்க்க அனுமதி வாங்கியிருக்கிறார். நடராஜன் அஜித் தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்ல அன்று நடராஜன் பிறந்த நாள் என கேள்விப்பட்டதும் அஜித் ஒரு கேக் ஆர்டர் செய்து பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார்கள். ஆனால் இது இந்தளவு விமர்சனத்திற்கு ஆளாகும் என்று அஜித் நினைக்கவே இல்லையாம்.

இதையும் படிங்க: இளையராஜாவுக்கு தனுஷ்னா ரஜினிக்கு இவர்தான்!.. ரெடியாகுமா சூப்பர் ஸ்டாரின் பயோபிக்?

அதனால் அதிகளவு மன உளைச்சலில் இருந்திருக்கிறார். இதன் காரணமாகவே படப்பிடிப்பில் நாம் அடையும் கஷ்டம் ரசிகர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அஜித்தான் அந்த வீடியோவை சுரேஷ் சந்திராவிற்கு அனுப்பி சமூக வலைதளங்களில் பதிவிட சொன்னாராம். மேலும் அந்த கார் சீனில் ரோட்டில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழும் காட்சி பதிவாகியிருக்கும்.

அதை பார்க்கும் போது ஏதோ 2 அடி போல்தான் தோன்றும். ஆனால் உண்மையிலேயே ரோட்டுக்கும் பள்ளத்திற்கும் இடைபட்ட தூரம் 23 அடியாம். அதுமட்டுமில்லாமல் வில்லன் காரை சேஸ் செய்து அஜித் வில்லன் கார் முன்னாடி தன் காரை ஓவர் டேக் செய்து நிறுத்துவதுதான் காட்சியாம். மற்ற காட்சிகள் எல்லாம் எடுக்கப்பட்ட நிலையில் அஜித் அவர் ஓட்டி வரும் காரை சுற்றி வந்து நிறுத்த முயற்சி செய்யும் போதுதான் நிலைதடுமாறி கவிழ்ந்திருக்கிறது என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: விடாமுயற்சி விபத்தால் ஆரவிற்கு அடித்த லக்…இதற்காக தான் அஜர்பைஜானில் ஷூட்டிங்கா?

Tags:    

Similar News