நயன்தாராவுக்கு கொடுக்காததை விஜே சித்துக்கு கொடுத்த தனுஷ்!.. என்னா மனுஷன்!....
Dhanush VJ Siddhu: கோலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையே முட்டிக்கொண்டது எல்லோருக்கும் தெரியும். துவக்கத்தில் எல்லோரும் நண்பர்களாகவே இருந்தனர். தனுஷ், நயன்தாரா, திரிஷா, அனிருத், சிம்பு போன்றவர்கள் ஒன்றாக ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் பார்ட்டிகளில் கலந்துகொள்வார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இப்போதும் கூகுளில் இருக்கிறது.
தனுஷுடன் யாராடி நீ மோகினி படத்தில் நடித்தார் நயன். தனுஷ் தயாரித்த எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார் நயன். ஆனால், நயனின் திருமண நிகழ்ச்சி தொடர்பான வீடியோவில் நானும் ரவுடிதான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இதில் கடுப்பான நயன்தாரா தனுஷை கண்டபடி விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். ஆனால், தனுஷோ எங்கும் இது பற்றி பேசவில்லை. ‘நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் மீது தனுஷுக்கு என்ன கோபம்?’ என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது. தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடித்தனர்.
இப்படம் உருவாகும்போது நயனை உஷார் பண்ண நினைத்த விக்னேஷ் சிவன் ஷூட்டிங்கில் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் விக்னேஷ் சிவன் மீது நயனும் காதலில் விழ ஷூட்டிங் ஸ்பாட்டே ரொமான்ஸ் ஏரியாவாக மாறியது. இதனால், ஷூட்டிங் ஒழுங்காக நடக்கவில்லை. சொன்ன பட்ஜெட்டை தாண்டிப்போனது. விஷயத்தை கேள்விப்பட்ட தனுஷ் கடுப்பாகி ‘இனிமேல் நான் பணம் தரமாட்டேன்’ என சொல்லிவிட்டார். எனவே, காதலன் விக்னேஷுக்காக நயனே தனது சொந்த பணத்தை கொடுத்து படத்தை முடித்தார்கள். அதன்பின் நயனிடமும், விக்னேஷ் சிவனிடம் பேசுவதையே தனுஷ் நிறுத்திக்கொண்டார்.
தன்னுடைய திருமண நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து நெட்பிளிக்ஸில் விற்று காசு பார்க்க ஆசைப்பட்டார் நயன். அதில்தான் நானும் ரவுடிதான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் வந்தது. இதற்குதான் தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். நாங்கள் பலமுறை முயன்றும் தனுஷ் என்.ஓ.சி கொடுக்கவில்லை என நயன் சொல்கிறார். ஆனால், முறையாக கேட்கவில்லை என தனுஷ் தரப்பு சொல்கிறது. எது உண்மை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
இந்நிலையில், பிரபல யுடியூபர் விஜே சித்து டயக்ராம் என்கிற படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்து வருகிறார். தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் பாடல்தான் சித்துவின் இண்ட்ரோ பாடலாக வருகிறது. இந்த பாடலை பயன்படுத்துவதற்காக தனுஷ் அவரிடம் பணமே வாங்காமல் ‘என்.ஓ.சி’ கொடுத்திருக்கிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிம்புவை வைத்து தான் இயக்கும் படத்திற்கும் தனுஷ் பணமே வாங்காமல் என்.ஓ.சி கொடுத்தார் என வெற்றிமாறன் சொன்னது குறிப்பிடத்தக்கது.