விக்னேஷ் சிவனை கதற வைக்கும் எல்.ஐ.கே!.. எப்பதான் ரிலீஸ் ஆகுமோ!...

By :  MURUGAN
Published On 2025-07-21 14:24 IST   |   Updated On 2025-07-21 14:24:00 IST

LIK Movie: சிம்புவை வைத்து போடா போடி படம் எடுத்து இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின் 3 வருடங்கள் கழித்து விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரை வைத்து நானும் ரவுடிதான் படத்தை எடுத்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். இந்த படத்தில்தான் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோருக்கும் தனுஷுக்கும் இடையே பிரச்சனை உண்டானது. அது இப்போது வரை நீடிக்கிறது.

இந்த படம் வெளியாகி 3 வருடங்கள் கழித்து சூர்யாவை வைத்து விக்னேஷ் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியானது. இந்த படம் ஹிட் அடிக்கவில்லை. அதன்பின் நயன்தாரா விக்னேஷ் திருமணம் செய்து கொண்டார். மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை எடுத்தார் விக்னேஷ் சிவன். இந்த படமும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.


இப்படம் வெளியாகியும் 3 வருடங்கள் ஆகிவிட்டது. விக்னேஷ் சிவனின் அடுத்த படம் இதுவரை வெளியாகவில்லை. போன வருடம் பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்.ஐ.கே என்கிற படத்தை இயக்கினார். இப்படத்தை மாஸ்டர், லியோ ஆகிய படங்களை தயாரித்த லலித்குமார் தயாரித்தார். இந்த படத்தின் பட்ஜெட் 65 கோடி என சொல்லப்படுகிறது. ஆனால், படம் பாதி வளர்ந்த நிலையில் சொன்ன பட்ஜெட்டை விட அதிக செலவு ஆனதால் லலித்குமார் கடுப்பாகி ‘இதற்கு மேல் என்னால் செலவு செய்ய முடியாது’ என சொல்லிவிட படம் கிடப்பில் போடப்பட்டது.

இதற்கிடையில், பிரதீப்பின் டிராகன் படமே வெளியாகிவிட்டது. மேலும், வேறு சில படங்களிலும் பிரதீப் நடிக்க துவங்கிவிட்டார். அதன்பின் பஞ்சாயத்து பேசி தீர்க்கப்பட்டு எல்.ஐ.கே படம் துவங்கியது. இந்த படத்தை 2025 பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் வெளியிட்ட திட்டமிட்டிருந்தனர். ஆனால், இப்போதுவரை படம் முடியவில்லை.

இந்நிலையில், இந்த படம் 2026 காதலர் தினத்தில்தான் படம் ரிலீஸ் என தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் நிறைய VFX பணிகள் இருப்பதால் அவ்வளவு நாட்கள் ஆகும் என சொன்னாலும் அதுதான் காரணமா இல்லை விக்னேஷ் சிவனுக்கும், தயாரிப்பாளருக்கும் மறுபடியும் முட்டிக்கொண்டதா என்பது தெரியவில்லை.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சீமான், க்ரீத்தி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Tags:    

Similar News