தளபதி லுக்கில் ரஜினி செம மாஸ்!.. கூலி பவர்ஹவுஸ் பாடல் ரிலீஸ் அப்டேட்!..
Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து ரஜினி நடித்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தில் ரஜினி முக்கிய வேடத்தில் நடித்திருந்தாலும் சத்தியராஜ், சௌபின் சாஹிர், உபேந்திரா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மேலும், வில்லனாக நாகார்ஜுனாவும் கேமியோ வேடத்தில் அமீர்கானும் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் ஒரு பேன் இண்டியா படமாக கூலி வெளியாகவுள்ளது. ஜெயிலரில் 650 கோடி வசூலை பார்த்த சன் பிக்சர்ஸ் கூலிக்கு 1000 கோடி முதல் 1200 கோடி வரை டார்கெட் வைத்திருக்கிறது.
ஏற்கனவே கூலி படத்தின் வியாபாரம் ரிலீஸுக்கு முன்பே 500 கோடியை தாண்டிவிட்டது. எனவே, தியேட்டர் வசூல் 500 கோடிக்கு மேல் வரும் என கணக்கு போட்டு காயை நகர்த்தி வருகிறார்கள். இந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜ் இரண்டு வருடங்கள் கடின உழைப்பை போட்டிருக்கிறார். அதிலும் சில நாட்கள் சரியாக தூங்காமல் கூட வேலை செய்திருக்கிறாராம்.
இப்படம் ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் சூடு பிடித்திருக்கிறது. ஏற்கனவே சிட்டுக்கு மற்றும் மோனிகா ஆகிய இரண்டு பாடல்களை படக்குழு வெளியிட்டது. இதில் பூஜா ஹெக்டே நடனமடியுள்ள மோனிகா பாடலுக்கு பலரும் நடனமாடி ரீல்ஸ் போட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், கூலி படத்தின் 3வது பாடலான பவுர்ஹவுஸ் இன்று இரவுக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ஒரு புதிய போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. தங்க கடத்தலை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. துறைமுகத்தில் வேலை செய்யும் ரஜினி தங்க கடத்தலை தடுக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார்.