ஒரே ரூம்ல வடிவேலுவும் கோவை சரளாவும்!.. இப்படி போட்டு உடைச்சிட்டாரே டைரக்டரு!...
Vadivelu Kovai sarala: இயக்குனர் விசுவிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றுக்கொண்டவர் வி.சேகர். குடும்பபாங்கான படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒன்னா இருக்க கத்துக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா உள்ளிட்ட பல படங்களையும் இயக்கியுள்ளார்.
குடும்பத்தில் பெண்கள் மற்றும் ஆண்களால் வரும் பிரச்சனைகளை மையமாக வைத்து படமெடுப்பது இவரின் பாணி. எனவே, இவரின் எல்லா படங்களிலும் குடும்பத்தை நல்ல படியாக நடத்துவதற்கான பாடம் இருக்கும். எனவே, குடும்ப பெண்கள் அதிக அளவில் இவரின் படங்களை விரும்பி பார்ப்பார்கள்.
துவக்கத்தில் இவரின் படங்களில் கவுண்டமணி, செந்தில் இருவரும் இருப்பார்கள். கவுண்டமணிக்கு நல்ல நல்ல வேடங்களை கொடுத்தவர் வி.சேகர்தான். இவர் இயக்கிய ஒன்னா இருக்க கத்துக்கணும் படத்தில் தான் ஏற்ற வேடம் கவுண்டமணியின் ஆல்டைம் ஃபேவரைட். ஒருகட்டத்தில் தனது படங்களில் வடிவேலுவை நடிக்க வைத்தார் வி.சேகர். அதில் அவருக்கு ஜோடியாக கோவை சரளாவை நடிக்க வைத்து அந்த ஜோடியை ஹிட்டாக்கிவிட்டார். அதன்பின் பல படங்களிலும் இருவரும் இணைந்து நடித்தார்கள். பெரும்பாலும் கோவை சரளாவிடம் வடிவேலு அடிவாங்குவது போல காட்சிகள் இருக்கும். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய வி.சேகர் பல பகீர் தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
‘நான் கமலுக்கு ஜோடியா நடிச்சவ. வடிவேலுவுக்கெல்லாம் ஜோடியா நடிக்க மாட்டேன்’ என சொன்னார் சரளா. ‘இல்லமா கருப்பு நாகேஷ் மாறி வருவான். திறமையான பையன்’ என அவரை பேசி சம்மதிக்க வச்சி நடிக்க வச்சேன். காலம் மாறிப்போச்சி படத்தில் வடிவேலுவும், சரளாவும் நடித்த காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவே தொடர்ந்து பல படங்களிலும் அப்படி நடித்தார்கள்.
ஒருநாள் ‘எனக்கு எதுக்கு தனி ரூம்.. வெட்டி செலவு.. எனக்கும்,சரளாவுக்கும் ஒரே ரூம் கொடுங்க. அதிலயே மேக்கப் போட்டுக்குறோம்’ என வடிவேலு சொன்னான். நானும் ஆச்சர்யப்பட்டேன். ஆனால், கதவை தட்டினால் அவர்கள் திறப்பதே இல்லை என சொன்னபோதுதான் எனக்கு புரிந்தது. அதனால், இனிமேல் உனக்கு சரளாவோடு ஜோடியே இல்லை என சொல்லி வடிவேலுவை விரட்டிவிட்டேன்’ என வி.சேகர் சொல்லியிருக்கிறார்.