துப்பறிவாளனுக்கே துப்பில்ல.. இதுல அந்த படத்தோட பார்ட் 2 வேறயா?.. கிழிஞ்சது போங்க!..
நடிகர் விஷால் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் விஷால்: நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் விஷால். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து பல வரும் இவர் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த விஷால் சமீப காலமாக தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருகின்றார்.
இவர் நடிப்பில் கடைசியாக ஹரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரத்தம். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகின்றார். நடிகர் விஷால் நடிகராக மட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகின்றார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் மார்க் ஆண்டனி. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார் விஷால்.
இந்த திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது அஜித்தை வைத்து குட் பேட் அக்லி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு நடிகர் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி 2 திரைப்படத்தை எடுக்கப் போவதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வருகின்றது.
இதற்கு இடையில் நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிக்க இருப்பதாக கூறி வந்தார். அதற்கான பணிகள் தொடங்குவதில் சில காலதாமதம் ஏற்பட்டு வருவதால் இந்த திரைப்படம் தற்போது வரை எடுக்காமல் இருந்து வருகின்றது. இயக்குனர் மிஸ்கினுடன் ஏற்பட்ட பிரச்சனையை காரணமாக துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை தானே இயக்கி நடிக்கப் போகின்றேன் என்று கூறி வந்தார்.
ஆனால் இப்படத்தின் அறிவிப்பு வெளியானவுடன் படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதற்கிடையில் தற்போது நடிகர் விஷால் மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாவது பாகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் விரைவில் அஜித்தின் திரைப்படத்தை முடித்துவிட்டு இந்த திரைப்படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த திரைப்படத்தையாவது ஒழுங்காக எடுத்து முடித்து ரிலீஸ் செய்து விடுவார்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏனென்றால் விஷாலின் திரைப்படங்கள் என்றாலே அதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். இடையில் நடிகர் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து இவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த போது பணம் தொடர்பான விஷயத்தில் நடிகர் விஷால் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அதற்கு இடையில் அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்க கூடாது எனவும் சமீபத்தில் பிரச்சனை எழுந்த நிலையில் மார்க் ஆண்டனி 2 டேக்ஆப் ஆகிவிடுமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.