விடாமுயற்சி வேண்டாம்!.. குட் பேட் அக்லியை ரிலீஸ் பண்ணு!.. கொதிக்கும் அஜித் ஃபேன்ஸ்!...
Vidaamuyarchi: அஜித் ஃபேன்ஸ் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம்தான் விடாமுயற்சி. துணிவு படத்திற்கு பின் இந்த படம் துவங்கப்பட்டது. ஆனால், இந்த படத்தை துவங்குவதற்கு முன்பே பல பஞ்சாயத்துகள் நடந்தது. லைக்கா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் நியமிக்கப்பட்டு அவர் சொன்ன கதை பிடிக்காமல் அவர் தூக்கப்பட்டார்.
அதன்பின் மகிழ் திருமேனி இயக்குனராக நியமிக்கப்பட்டாலும் எந்த கதையை படமாக எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்தது. பல கதைகள் பேசப்பட்டு ஒன்றும் இறுதியாகவில்லை. அதோடு, அஜித்தும் பைக்கில் உலகை சுற்றப்போய்விட்டு சில மாதங்கள் கழித்து வந்தார்.
அதன்பின் ஹாலிவுட்டில் வெளிவந்த பிரேக் டவுன் படத்தின் கதையை எடுப்பது என முடிவானது. தனது மனைவியை கூட்டிக்கொண்டு வெளிநாட்டுக்கு போகும் ஹீரோவின் மனைவியை ஒரு கும்பல் கடத்திவிட அதை அவர் எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் படப்பிடிப்பு அஜர் பைசானில் துவங்கப்பட்டது.
அஜித்தின் மனைவியாக திரிஷா நடிக்க வில்லனாக அர்ஜூன் நடிக்கிறார் என சொன்னார்கள். ஆனால், பல காரணங்களால் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்காமல் தடை பட்டுக்கொண்டே வந்தது. குறிப்பாக இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதால் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டது. ஏனெனில், இந்தியன் 2, விடாமுயற்சி, லால் சலாம் என ஒரே நேரத்தில் பல படங்களை அந்நிறுவனம் தயாரித்ததே அதற்கு காரணம்.
அதன்பின் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களும் வெளியானது. படப்பிடிப்பு முடிந்துவிட்டது.. இல்லை முடியவில்லை.. ஒரு பாடல் காட்சி பாக்கி.. என மாறிமாறி செய்திகள் வெளிவந்தது. ஒருகட்டத்தில், அஜித் ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப்போய் அந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் ஹைப் ஏத்தியது.
சில நாட்கள் கழித்து மிகவும் சுமாரான விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அஜித் ரசிகர்களை ஏமாற்றியது. எனவே, விடாமுயற்சியை விட்டு விட்டு அஜித் ஃபேன்ஸ் குட் பேட் அக்லி படத்தின் மீது கவனத்தை திருப்பினார்கள். ஆனால், சில நாட்களுக்கு முன்பு விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என செய்திகள் வெளியானது.
எனவே, அஜித் ரசிகர்கள் உற்சாகமானார்கள். இந்நிலையில்தான் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகாது என லைக்கா நிறுவனம் நேற்று இரவு செய்தி வெளியிட்டது. இது அஜித் ரசிகர்களை கோபப்படுத்தியிருக்கிறது. பின்னணி இசை, சென்சார் பணி என சில பணிகளை முடிக்க முடியாது என்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளி போயிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், விடாமுயற்சி எங்களுக்கு வேண்டாம். குட் பேட் அக்லியை பொங்கலுக்கு வெளியிடுங்கள் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.