என்கிட்ட இருந்து நீங்க ஏன் எதிர்பார்க்கிறீங்க?.. தீடீரென கொந்தளித்த அனிதா சம்பத்!..
அனிதா சம்பத் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு கோபமாக பதில் அளித்து இருக்கின்றார்.
அனிதா சம்பத்: சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் அனிதா சம்பத். தமிழ் சினிமாவில் காப்பான், 2.0, காலா உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றார். தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக கலக்கி வந்த அனிதா சம்பத் திடீரென்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி கோபப்பட்டதால் தனது பெயரை கெடுத்துக் கொண்டார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் பிக்பாஸ் ஜோடி என்கின்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய அனிதா சம்பத் அவ்வபோது தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருவார்.
தனது குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவார். மேலும் youtube சேனல் ஒன்று நடத்தி வரும் அனிதா சம்பத் அதில் தினமும் வீடியோக்களை பகிர்ந்து அதன் மூலமாகவும் சம்பாதித்து வருகின்றார். விதமாக உடை அணிந்து நடனமாடி இவர் வெளியிடும் ரீல்ஸ்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.
அனிதா சம்பத் கடந்து 2019 ஆம் ஆண்டு பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எப்போதும் தனது கணவர் குறித்து பெருமையாக பேசுபவர் அனிதா சம்பத். தற்போது சோசியல் மீடியாக்களில் மட்டுமே அதிக அளவு கவனம் செலுத்தி சம்பாதித்து வருகின்றார். மேலும் சமீபத்தில் வீடு ஒன்றை கட்டியிருக்கும் அனிதா சம்பத் அது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
அப்போது தனது கணவருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வார் அனிதா சம்பத் அந்த வகையில் தனது கணவருடன் தாய்லாந்து சென்றிருக்கும் அனிதா சம்பத் அங்கு புக்கட் தீவிலிருந்து தனது கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். அதில் தனது கணவருக்கு லிப் லாக் கொடுப்பது போன்ற புகைப்படத்தை எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதற்கு தனது கமெண்ட்களை பகிர்ந்து வருகிறார்கள். அதில் ஒருவர் அனிதா சம்பத்திடமிருந்து இது போன்ற புகைப்படத்தை நான் எதிர்பார்க்கவில்லை என்று ஒருவர் கூறியிருந்தார். அவருக்கு பதில் அளித்திருக்கும் அனிதா சம்பத் என்னிடமிருந்து நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்.
உங்களின் எதிர்பார்ப்புகள் தான் எனக்கு பிரச்சனையை கொடுக்கின்றது. என் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ அனுமதியுங்கள். உங்கள் விருப்பப்படி என் வாழ்க்கையை நான் வாழ முடியாது. உங்களை திருப்த்திப்படுத்த வாழ முடியாது. இதை சொல்ல எனக்கு வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி என்று பகிர்ந்து இருக்கின்றார். இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது