தம்பி மாட்டிக்கிட்டாரு.. தப்பிக்கிறதுக்கு இப்படி ஒரு உருட்டு!.. விக்கியை கலாய்த்த பிஸ்மி..!
புதுச்சேரி ஹோட்டலை விலைக்கு கேட்ட விவகாரத்தில் விக்னேஷ் சிவன் பொய் கூறுவதாக பிஸ்மி தெரிவித்து இருக்கின்றார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன்:
தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து வாய்ப்பு இல்லாமல் இருந்த இவருக்கு வாய்ப்பு கொடுத்தவர் நடிகர் தனுஷ். தனது தயாரிப்பில் நானும் ரவுடிதான் என்கின்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த திரைப்படம் சினிமா வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இவருக்கு பெரும் சிறப்புமுனையாக அமைந்தது.
நயன்தாராவின் கணவர்:
நானும் ரவுடிதான் திரைப்படத்தின் நடித்துக் கொண்டிருந்த போது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் பல வருடங்கள் காதலித்து வந்தனர். பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை பல பிரபலங்கள் வந்திருந்தார்கள்.
நயன்தாராவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனின் மார்க்கெட் உயர்ந்தது. தொடர்ந்து பெரிய நடிகர்களின் திரைப்படங்களை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் அஜித் திரைப்படத்தில் கமிட்டான இவர் அதன்பிறகு சில பிரச்சினைகள் காரணமாக அப்படத்திலிருந்து விலகினார். தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐகே என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.
தனுஷ் உடன் பிரச்சனை:
நடிகை நயன்தாராவின் டாக்குமென்டரி படத்தில் நானும் ரவுடிதான் படத்தில் இருந்து 3 வினாடி காட்சியை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக நடிகை நயன்தாரா மூன்று பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டிருந்தார். விக்னேஷ் சிவனும் தனது பங்குக்கு தனது சமூக வலைதள பக்கத்தில் தனுஷ் குறித்து பேசியிருந்தார். கணவனும் மனைவியும் சேர்ந்து தனுஷ் குறித்து சோசியல் மீடியாக்களில் பேசி வந்தார்கள். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
புதுச்சேரி ஹோட்டல்:
அண்மையில் புதுச்சேரிக்கு சென்றிருந்த விக்னேஷ் சிவன் அங்கு கடற்கரை அருகே இருந்த அரசுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றை விலைக்கு கேட்டதாக சமூக வலைதள பக்கங்களில் செய்திகள் பரவி வந்தன. அமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த செய்தி வைரலாகி வர இதற்கு மறுப்பு தெரிவித்து விக்னேஷ் சிவன் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். தான் புதுச்சேரி விமான நிலையத்தில் படத்தின் ஷூட்டிங் பர்மிஷன் வாங்குவதற்காக தான் அமைச்சரை சந்தித்ததாக கூறியிருந்தார்.
பிஸ்மி பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிஸ்மி விக்னேஷ் சிவன் அறிக்கை தொடர்பாக பேசி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது " இந்த விஷயத்தில் விக்னேஷ் சிவன் பொய் கூறுகிறார் என்று தான் நான் சொல்லுவேன். என்ன காரணம் என்றால் இரண்டு விஷயம், நீங்கள் விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் அதற்கு முதலமைச்சரிடமோ, அமைச்சரிடமோ பர்மிஷன் வாங்க வேண்டிய அவசியமில்லை.
ஏர்போர்ட் அத்தாரிட்டி இடம் மட்டுமே பர்மிஷன் வாங்கினால் போதுமானது. பாண்டிச்சேரி ஏர்போர்ட்டாக இருந்தாலும் அதுவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடியது. நீங்கள் பர்மிஷன் வாங்க வேண்டும் என்றால் ஏர்போர்ட் அத்தாரிட்டி இடம் பேசினால் போதுமானது. பின்னர் அமைச்சரை மரியாதை நிமித்தமாக பார்க்க சென்றேன் என்று கூறுகின்றார். மரியாதை நிமிர்த்தமான என்ற வார்த்தை போல பொய்யான போலியான வார்த்தை எதுவுமே கிடையாது என்று கூறி இருக்கின்றார்.