அடுத்த அவார்டுக்கு ரெடியான தனுஷ்!.. இட்லி கடை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பாருங்க!...

By :  Murugan
Update: 2025-01-01 12:35 GMT

dhanush

Idli kadai: துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அண்ணன் செல்வராகவனிடம் நடிப்பு பயிற்சி எடுத்தவர். காதல் கொண்டேன், திருடா திருடி என தொடர் ஹிட் படங்களை கொடுத்து திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர். ஒல்லியான உடலமைப்பை கொண்டிருந்தாலும் நடிப்பில் சுள்ளானாக துள்ளினார் தனுஷ்.

சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்காக கமர்ஷியல் படங்களிலும், தனது நடிப்பு திறமையை காட்டுவதற்காக நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்து வரும் நடிகர் இவர். செல்வராகவனுக்கு பின் வெற்றிமாறன் பட்டறையிலும் கலக்கினார். அவரின் இயக்கத்தில் ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்களில் நடித்து தேசிய விருது வாங்கினார்.

தனுஷை தேடி இயக்குனர்கள் வந்தபோது தானும் இயக்குனர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டவர் இவர். இவர் இயக்கிய முதல் திரைப்படம் பவர் பாண்டி. இந்த படத்தில் ராஜ்கிரண் கதையின் நாயகனாக நடித்திருந்தார். முதுமையான பின்னரும் ஒருவருக்கு காதல் வரும் என காட்டியிருந்தார்.

அதன்பின் பல வருடங்கள் கழித்து தனுஷ் இயக்கி நடித்த திரைப்படம்தான் ராயன். மிகவும் குறைந்த நாட்களில் இப்படத்தை உருவாக்கியிருந்தார் தனுஷ். இந்த படத்தில் தனுஷோடு நித்யா மேனன், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா என பலரும் நடித்திருந்தார்கள். அதோடு, தனுஷின் அண்ணன் செல்வராகவனும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.



 


இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதன்பின் தனுஷ் இட்லி கடை என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலும் நித்யா மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில்தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனுஷ் இப்போது வெளியிட்டுள்ளார்.


இந்த படத்தில் காரைக்குடி ஸ்டைலில் இட்லி கடை நடத்தும் வேடத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். அவரின் அப்பாவாக ராஜ்கிரண் நடித்திருப்பதாக தெரிகிறது. போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் கண்டிப்பாக தனுஷுக்கு விருதுகளை பெற்றுத்தரும் என கணிக்கப்படுகிறது. இட்லி கடை திரைப்படம் இந்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags:    

Similar News