மீண்டும் முதல்வன் கதையா?.. கேம் சேஞ்சரிலாவது தப்பிப்பாரா நம்ம பிரம்மாண்டம்..!

By :  Ramya
Update: 2024-12-19 08:57 GMT

game changer

இயக்குனர் சங்கர்:

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் இயக்குனர் சங்கர். ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசத்தை காட்டி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தவர். மேலும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற வரும் இயக்குனர் சங்கர்தான். ஜென்டில்மேன் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்படத்தை தொடங்கிய சங்கர் தன்னுடைய முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.

இதையும் படிங்க: இப்பயே சொல்லிட்டோம் அப்புறம் சண்டை போடக்கூடாது!.. ஸ்ட்ரிட் நோட்டீஸ் கொடுத்த விடுதலை 2..!

அதன் பிறகு அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் தான். ஜென்டில்மேன் திரைப்படத்திற்கு பிறகு இவர் இயக்கிய காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன் என அடுத்தடுத்து வெற்றியை கொடுத்து தோல்வியை கண்டிராத ஒரு இயக்குனராக வலம் வந்தார். ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான அதேசமயம் பிரம்மாண்டமான கமர்சியல் படங்களை எடுத்து தனக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் இயக்குனர் சங்கர்.


இந்தியன் 2 தோல்வி:

கடந்த 1996 ஆம் ஆண்டு தான் இயக்கிய இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கினார் ஷங்கர். இந்த திரைப்படம் தொடக்கம் முதலே மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் படம் ரிலீசுக்கு பிறகும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வந்த ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் இந்த படத்தை ட்ரோல் செய்து வந்தார்கள். இது இயக்குனர் சங்கருக்கு முதல் தோல்வியாக அமைந்தது. இந்தியன் 2 படத்திற்கு முன்பு வரை அவர் இயக்கிய அனைத்து படங்களுமே மெகா ஹிட் கொடுத்துள்ளது. அப்படி இருக்கையில் ஒரு படம் தோல்வி அடைந்ததற்கு பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வந்தார்கள்.

கேம் சேஞ்சர்:

இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சங்கர் கேம் சேஞ்சர் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ராம்சரண் நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படத்தின் மூலமாக சங்கர் கம்பேக் கொடுப்பார் என்று கூறி வருகிறார்கள்.

இயக்குனர் சங்கர் பேட்டி: 

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சங்கர் அதில் கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்து பேசி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'கேம் சேஞ்சர் என்பது ஒரு அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடையிலான மோதலை மையமாகக் கொண்ட ஒரு வணிக பொழுதுபோக்கு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் 3 விதமான தோற்றங்களில் நடித்திருக்கின்றார். ராம்சரணுக்கும், எஸ் ஜே சூர்யா உள்ள மோதல் மிகப்பிரமாதமாக இருக்கும். மேலும் இந்த திரைப்படம் ராம்சரணுக்கு ஒரு லைஃப் டைம் கதாபாத்திரமாக இருக்கும்' என்று தெரிவித்து இருக்கின்றார்.


முதல்வன் கதையா?

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் கதை அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த முதல்வன் திரைப்படத்தின் கதை போலவே இருக்கின்றது. ஒருவேளை அந்த படத்தை தான் தெலுங்கில் ராம்சரனை வைத்து இந்த காலத்திற்கு ஏற்றது போல் மாற்றி எடுத்து வைத்திருக்கின்றாரா இயக்குனர் சங்கர் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இப்படத்தின் மூலமாகவாது பழைய சங்கரை மீண்டும் பார்க்க முடியுமா என்றும் கேட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News