Thug Life: தக் லைஃப் முதல் நாள் வசூல் இவ்வளவு தொகை வருமா?...எதிர்பார்ப்பில் திரையுலம்
தக் லைஃப் முதல் நாள் வசூல் வசூல் எவ்வளவு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.;
மணிரத்னம் இயக்கத்தில் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளூக்கிடையே தயாரான திரைப்படம் தக் லைஃப். கமல்ஹாசன், சிலம்பரசன், அசோக் செல்வன், அபிராமி, திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். டைட்டில் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
முதலில் சிம்பு நடித்துள்ள வேடத்தில் ரவி மோகனும், துல்கர் சல்மானும் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ அவர்கள் விலகிவிட சிம்பு உள்ளே வந்தார். இதனால் படத்துக்கு இன்னும் ஹைப் ஏறியது. அதுமட்டுமல்லாமல் ரகுமானின் பாடல்கள் வேறு நீண்ட நாட்களுக்கு பிறகு மிகப்பெரிய ஹிட் அடித்த்கது படத்திற்கு மேலும் பலம் சேர்த்தது.
தக் லைஃப் முதல் நாள் வசூல் வசூல் எவ்வளவு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்த நிலையில் தக் லைஃப் இன்று வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் முதல் நாள் கலெக்சன் எவ்வளவு வரும் என்று பலரும் அறிய காத்திருக்கின்றனர். உலகளவில் கிட்டத்தட்ட சுமார் ரூ. 50 கோடி வரை முதல் நாள் கலெக்சன் இருக்கும் என திரையுலகை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.