ஸ்ருதிஹாசன் நடிப்பை பார்த்து மிரண்டு போன ரஜினி!.. அதன்பின் நடந்த தரமான சம்பவம்...
கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் பல வருடங்களாகவே சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அஜித், விஜய், விஷால், தனுஷ், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்திருக்கிறார். சில ஹிந்தி படங்களில் படுக்கையறை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்திருக்கிறார்.
தெலுங்கில் பாலையாவுக்கெல்லாம் ஜோடி போட்டு நடித்தவர் இவர். கடந்த சில வருடங்களாகவே இவர் சினிமாவில் நடிப்பதில்லை. தமிழில் இவர் எப்போது கடைசியாக நடித்தார் என்பது ரசிகர்களுக்கே மறந்துவிட்டது. இடையில் லோகேஷ் கனகராஜுடன் ரொமான்ஸ் செய்வது போல் ஒரு ஆல்பம் வீடியோவில் நடித்தார்.
தற்போது கூலி படத்தில் சத்யராஜின் மகளாக நடித்திருக்கிறார். 30 வருஷமா ஒருத்தனை ஆஃப் லைனில் வைத்திருக்கிறேன் என சத்யராஜும், உனக்கு அவன் அப்பா... எனக்கு அவன் நண்பன் என ஸ்ருதிஹாசனிடம் ரஜினி பேசும் வசனமும் டிரெய்லரில் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ் ‘ஸ்ருதி ஒரு காட்சியில் நடித்த ஃபுட்டேஜை ரஜினி சாரிடம் காட்டினேன். அவரின் நடிப்பை பார்த்து பாராட்டிய அவர் உடனே ஸ்வீட்ஸ் ஆர்டர் செய்து ஸ்ருதிக்கு ஊட்டிவிட்டார். அதேபோல் சௌபின் நடிப்பையும் பாராட்டி பரிசுகள் கொடுத்தார்' என சொல்லியிருக்கிறார்.