பொங்கலுக்கு வெளியாகும் 7 படங்களின் லிஸ்ட்!.. அட விஜயகாந்த் மகனும் வறாரு!..
Pongal release movies: தீபாவளி, பொங்கல் என்றாலே புது படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கும். அதுவும் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். தீபாவளிக்கு அமரன், பிரதர், பிளடி பெக்கர், லக்கி பாஸ்கர் என 4 படங்கள் வெளியானது. இதில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய 2 படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது.
தற்போது 2025ம் வருடம் துவங்கிவிட்டது. விரைவில் பொங்கல் வருவதால் புதிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. ஆனால், இந்த முறை பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் பின்வாங்கிவிட்டது.
விடாமுயற்சி வரவில்லை என்பதால் பின்னர் வரலாம் என காத்திருந்த சில படங்களும் பொங்கல் ரேஸில் களமிறங்குகிறது. மொத்தம் 7 படங்கள் பொங்கல் ரேஸில் இருக்கிறது. பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படம் பொங்கல் ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் பாலாவின் படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதேபோல், சியான் விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படமும் பொங்கல் ரேஸில் இருக்கிறது. இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகியுள்ள நிலையில் புதுவிதமாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள். பக்கா கேங்ஸ்டர் படமாக இப்படம் உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படமும் பொங்கலுக்கு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்கே 90 கோடி வரை செலவு செய்திருப்பதாக ஹைப் ஏற்றியிருக்கிறார்கள். ஷங்கருக்கு இந்தியன் 2 படம் சரியாக ஓடாத நிலையில் கேம் சேஞ்சர் கை கொடுக்குமா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள காதலிக்க நேரமில்லை, சிபிராஜ் நடித்துள்ள டென் ஹவர்ஸ், புது முகங்கள் நடித்துள்ள 2கே லவ் ஸ்டோரி மற்றும் தருணம் படங்களும் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. மேலும், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ படத்தையும் பொங்கலுக்கு களமிறக்குகிறார்கள்.
இப்படி 7 படங்கள் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் எந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரம், கடைசி நேரத்தில் இந்த லிஸ்ட்டில் இருந்து சில படங்கள் விலகி புதிய படங்கள் இணையவும் வாய்ப்பிருக்கிறது.