கெஞ்சிக்கேட்ட சிவகார்த்திகேயன்.. ஓ.கே சொன்ன முருகதாஸ்!. எஸ்.கே 25 டேக் ஆப் ஆனதன் பின்னணி!...
SK25: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். காதல் கலந்த காமெடி கதைகளில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர். தொடர்ந்து அது போலவே நடித்து வந்த அவர் அமரன் படம் மூலம் வேற ரூட்டுக்கு மாறியிருக்கிறார். மாவீரன் படத்தில் இவரின் நடிப்பு பாராட்டை பெற்ற நிலையில் அமரன் படத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார்.
இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை திரைக்கதையாக மாற்றி சிறப்பாக இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
எனவே, பெரிய பெரிய இயக்குனர்களுடன் கை கோர்த்து தன்னை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல சிவகார்த்திகேயன் திட்டமிட்டிருக்கிறார். அமரன் படத்தில் நடிப்பதற்கு முன்பே ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார். அதன்பின் அந்த படத்தை விட்டுவிட்டு அமரன் படத்திற்கு போனார்.
எனவே, ஹிந்தியில் சல்மான்கானை வைத்து ஒரு புதிய படத்தை துவங்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். அமரன் படம் முடிந்துவிட்டாலும் முருகதஸால் உடனே வரமுடியாத நிலை. அந்த படத்திற்காக தாடி வைத்திருந்தார் சிவகார்த்திகேயன். ஒருபக்கம், சூரரைப்போற்று இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இது அவரின் 25வது திரைப்படமாகும். இந்த படத்தில் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்கள். இந்த படத்திற்காக தாடியை எடுக்க வேண்டும் என சுதா கொங்கரா சொல்ல ‘முருகதாஸ் சார் திடீரென கூப்பிட்டால் நான் போக வேண்டும். அந்த படத்திற்காக தாடி வைத்திருக்கிறேன். எனவே முடியாது’ என சொல்ல சுதாகொங்கரா கோபப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. எனவே, இந்த படம் டேக் ஆப் ஆகுமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது.
ஆனால், நேற்று இந்த படத்தின் பூஜை நடந்தது. சிவகார்த்திகேயன் தாடியை எடுத்துவிட்டு பூஜையில் கலந்து கொண்டார். இந்நிலையில், என்ன நடந்தது என்கிற செய்தி வெளியே கசிந்திருக்கிறது. முருகதாஸை சல்மான்கான் படத்தை விட்டுவிட்டு வர இன்னும் 3 மாதங்கள் ஆகிவிடுமாம். எனவே, ‘இப்போது நான் தாடியை எடுத்துவிடுகிறேன். நீங்கள் படப்பிடிப்பு துவங்கும்போது சொல்லுங்கள். நான் தாடி வளர்த்துவிடுகிறேன்’ என எஸ்.கே. சொல்ல முருகதாஸும் சம்மதம் சொல்லிவிட்டார். இதைத்தொடர்ந்தே தாடியை எடுத்துவிட்டு சுதாகொங்கரா படத்திற்கு வந்துவிட்டார் எஸ்.கே என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.