கார்த்திகை மீட்ஸ் 'கிறிஸ்துமஸ்'... எரிகிற தீயில் திரிஷா ஊற்றிய 'பெட்ரோல்'

By :  Murugan
Update: 2024-12-16 06:51 GMT

Actress Trisha: நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனி விமானத்தில் விஜய் - திரிஷா சென்ற விஷயம்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக். அரசியலுக்கு வந்திருக்கும் விஜய்க்கு இது வேண்டாத வேலை என அவரது ரசிகர்கள், ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து கழுவி ஊற்றி வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்க முடியவில்லை கோவாவிற்கு தனி விமானமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னம் சிலர் ஒருபடி மேலே சென்று ‘அக்கா எங்க அண்ணாவா விட்ருக்கா’ என திரிஷாவிடம் கெஞ்சி வருகின்றனர்.


ஆனால் தற்போது திரிஷா போட்டிருக்கும் போஸ்ட் இந்த பிரச்சினைக்கு பெட்ரோல் ஊற்றியது போல இருக்கிறது. '5 நாட்களில் 6 பிளைட்' என இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் போட்டிருக்கும் திரிஷா அடுத்து 'கார்த்திகை மீட்ஸ் கிறிஸ்துமஸ்' என ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘விஜய் கிறிஸ்தவர்.. நீங்கள் இந்து.. இதை வெளிப்படையாக தெரிவித்ததற்கு நன்றி’ என கிண்டலடித்து வருகின்றனர்.

மகளின் பள்ளி விழாவில் விஜய் கலந்து கொள்ளவில்லை. ஜேசன் சஞ்சய்தான் அண்ணனாக கலந்து கொண்டார். சங்கீதா எங்கிருக்கார் என்பதே தெரியவில்லை. இவை அனைத்தையும் அரசியல் ஆசையில் செய்கிறார் என எடுத்துக் கொண்டால் கூட திரிஷாவுடன் விஜய் சென்றது நிச்சயம் குடும்பத்தில் பிரச்சினை இருப்பதை அறிவிப்பதாக இருக்கிறது.


இப்படியே சென்றால் அண்ணாவின் அரசியல் ஆசை புஸ்வாணமாகி விடுமோ என ரசிகர்கள் தான் தற்போது புலம்பி வருகின்றனர். எல்லாருக்கும் முன்மாதிரியா இருப்பாருன்னு பார்த்தா கடைசில நமக்கே விபூதி அடிக்க பாக்குறாரே என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. அண்ணா இதற்காவது பதில் சொல்வாரா? இல்லை வழக்கம்போல அமைதி காப்பாரா?..


Tags:    

Similar News