வணங்கான் புது தகவல்கள்: விக்ரம் வரல... சூர்யா வந்துட்டாரு... அதுக்கு இதுதான் காரணமா?

By :  Sankaran
Update: 2024-12-21 07:22 GMT

இயக்குனர் பாலா திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. சேது படம் வெளிவருவதற்குள் பெரிய போராட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் சிவகுமார் பெரிய அளவில் பாலாவுக்கு உதவினார். படம் வெளியானதும் நல்ல பிக்கப் ஆனது.

அதனால் சிவகுமாருக்கு நன்றிக்கடனாக ஏதாவது பண்ணனும்னு நந்தா படத்தை சிவகுமாரின் மகன் சூர்யாவுக்குக் கொடுத்தார். நந்தாவுக்குப் பிறகு புது சூர்யாவை உருவாக்குகிறார். எப்படி பார்க்கணும், எப்படி நடக்கணும்னு நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்.

வணங்கான் படத்திற்கு முதலில் சூர்யா தான் நடிப்பதாக இருந்தது. பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு படம் நின்னு போச்சு. அப்புறம் அருண்விஜய் நடிப்பில் அது உருவானது.  வணங்கான் ஆடியோ லாஞ்சும், 25வது ஆண்டு விழாவும் பிரம்மாண்டமாக நடந்தது.

இந்த விழாவில் பாலாவும், விக்ரமும் கலந்து கொள்வார்களா என கேள்வி எழுந்தது. பாலாவுக்கும், சூர்யாவுக்கும் உள்ள மனஸ்தாபம் தெரிந்த விஷயம்தான்.

விக்ரம் என்ன பண்ணினாருன்னா அர்ஜூன் ரெட்டின்னு ஒரு தெலுங்கு படத்தை ரைட்ஸ் வாங்கிட்டு வந்து தமிழ்ல விக்ரமோட பையனை வச்சி பாலா ஆரம்பிச்சாரு. முழு படமும் எடுக்கப்பட்டு கடைசில அந்தப் படத்தை ரிலீஸே பண்ண முடியாம தூக்கி வச்சிட்டாங்க.

ஆனா வேற ஒரு டைரக்டரை வச்சி ரிலீஸ் பண்ணினாங்க. அந்தப் படமும் சரியா ஓடல. அப்போ ஒரு டைரக்டரைக் கமிட் பண்ணிட்டு அவரை வச்சி முழு படமும் எடுத்துட்டு அந்தப் படத்தை வெளியிடலன்னா அவரை இன்சல்ட் பண்ணினதுக்குச் சமம். அந்த வேலையை விக்ரம் செஞ்சிட்டாரு. நிகழ்ச்சிக்கு விக்ரம் வரல.

ஆனா சூர்யா மனமாற்றம் வந்து நிகழ்ச்சிக்கு வந்துட்டாரு. பாலாவும் அவரைக் கட்டிப்பிடிச்சி ஆரத்தழுவிக்கிட்டாரு. கஞ்சா தோட்டத்தை தமிழ்சினிமாவுல யாரும் பதிவு பண்ணாத விஷயம். அந்தக் களம் தமிழ்சினிமாவுக்குப் புதுசு.


அதே போல நான் கடவுள் படத்துல அகோரிங்கற விஷயத்தைக் கொண்டு வந்தாரு. புதிய நடிகர்களை உருவாக்குறது, பழைய நடிகர்களை புதுப்பிக்கிறது என பல விஷயங்களைச் செய்தார்.

அதனால் அவர் 25வது ஆண்டு விழா கொண்டாடுவதற்கு மிகத் தகுதியான நபர். பரதேசி படத்திலும் புதுவிதமாக முயற்சிகளை எடுத்திருந்தார். அதன் நீட்சியாகத் தான் வணங்கான் படத்தை எடுத்துளள்ளார். பொங்கலுக்கு வெளியாகிறது. படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. ஒரு கையில் பெரியாரும், இன்னொரு கையில் பிள்ளையாரையும் வைத்துள்ள ஸ்டில் இருக்கு.

அந்தவகையில் படத்தில் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை வச்சிருக்காரு. அவர் ரொம்ப சஸ்பென்ஸா வச்சிருக்காரு. மியூசிக் ஜிவி.பிரகாஷ் ரொம்ப நல்லாவே பண்ணிருக்காரு. மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் சுபையர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News