அஜித்தின் அடுத்த பட டைரக்டர் சிவா இல்லையாமே!. இது வேறவெவல் டிவிஸ்ட்!..

By :  Murugan
Update: 2024-12-19 14:28 GMT

ajith

Ajith next: விஜய் அரசியலுக்கு போய்விட்ட நிலையில் எல்லோரின் கவனமும் அஜித் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆனால், அஜித்தோ சினிமாவில் நடித்தாலும் பைக் ரேஸ், கார் ரேஸ் என ஒருபக்கம் சென்றுவிட்டார். அடுத்த வருடம் 2025 ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை முழுக்க முழுக்க கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறார்.

ஒரு வருடத்திற்கு முன்பு விடாமுயற்சி படத்தில் நடிக்க துவங்கினார். ஆனால், பல காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்கப்போனார். தற்போது விடாமுயற்சி படம் முடிவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே குட் பேட் அக்லி படம் முடிந்துவிட்டது.


அதோடு, உடல் எடையை குறைத்து அஜித் நிற்கும் இரண்டு படங்களின் புகைப்படங்களும் வெளியாகி திரையுலகினரையும், ரசிகர்களையும் ஆச்சர்யப்படுத்தியது. ஒருபக்கம், அஜித் உடலை குறைத்தது படத்திற்காக இல்லை. அப்படியெனில் எப்போதோ அதை செய்திருப்பார். துபாயில் நடக்கவுள்ள கார் ரேஸில் கலந்துகொள்ள வேண்டுமெனில் உடல் எடை இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்கிற விதிமுறை இருக்கிறது.

அதற்காகவே அஜித் உடலை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கிறார் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள். ஒருபக்கம், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. ஏற்கனவே, அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது சிறுத்தை சிவாதான் என சொன்னார்கள். கங்குவாவுக்கு நெகட்டிவ் விமர்சனம் வந்தபோது ‘தைரியமாக இருங்கள்’ என அஜித் தரப்பிலிருந்து நம்பிக்கை கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.


ஆனால், தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் கோட் பட இயக்குனர் வெங்கட்பிரபுவும் இருக்கிறாராம். மங்காத்தா படத்திற்கு பின் ஒரு சின்ன விஷயத்தால் வெங்கட்பிரபு மீது கோபமாக இருந்தார் அஜித். ஆனால், தற்போது இருவரும் மீண்டும் பேச துவங்கிவிட்டனர். எனவே, அஜித் அவரை டிக் அடிக்கவும் வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.

ஒருபக்கம், சிறுத்தை சிவா வேண்டாம் என்பதே அஜித் ரசிகர்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது. ஏனெனில், அண்ணாத்த மற்றும் கங்குவா பட ரிசல்ட் அவர்களை இந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறது. ஒருபக்கம், அஜித்தின் அடுத்த படத்தை நாம் இயக்க வேண்டும் என வெங்கட்பிரபுவும் முயற்சி செய்து வருகிறாராம். அஜித் என்ன முடிவெடுப்பார் என்பது அடுத்த வரும் ஆகஸ்டு மாதமே தெரியவரும்.


இதற்கிடையில் அஜித்தின் விடாமுயற்சி படம் 2025 பொங்கலுக்கும், குட் பேட் அக்லி படம் 2025 மே மாதமும் வெளியாகவுள்ளது. அதன் பிறகே தனது அடுத்த பட இயக்குனர் பற்றி அஜித் யோசிப்பார் என்கிறார்கள். 2025 அக்டோபர் மாதம் ரேஸ் முடிந்த பின்னரே அஜித் சென்னைக்கு லேண்ட் ஆக இருக்கிறார் என்கிறார்கள்.

Also Read : அஜித் எப்படி இப்படி ஸ்லிம்மாக மாறினார் தெரியுமா?!.. கசிந்த தகவல்!...


Tags:    

Similar News