ஆதித்யா டிவி ஆதவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி!.. கண்கலங்கிய தருணம்!...

By :  Murugan
Update: 2024-12-21 06:30 GMT

aadhavan

VJ Adhavan: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதவன். சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பொறியியல் படித்தவர் இவர். ரேடியோ ஜாக்கி, வி.ஜே., மிமிக்ரி கலைஞர் என பல முகங்களை உடையவர் இவர். கல்லூரியில் படிக்கும்போது மிமிக்ரியில் இவருக்கு அதிக ஆர்வம் இருந்தது.

கல்லூரி படிப்புக்கு பின் சில தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த ஆதவன் நில நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து ரசிக்க வைத்தார். அதன்பின்னர் ரேடியோவில் தொகுப்பாளர் வேலை கிடைத்தது. சினிமா பிரபலங்களிடம் உரையாடுவது, புது படங்களின் அப்டேட் சொல்வது என கலக்கி வந்தார்.


அதன்பின் கலக்கப் போவது யாரு 4வது சீசனில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் ஆதித்யா டிவி சேனலில் ஆங்கராக சேர்ந்தார். அதில் இவர் நடத்திய ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ நிகழ்ச்சி ரசிகர்களிடம் சூப்பர் வரவேற்பை பெற்றது. ஒரு இடத்திற்கு சென்று சினிமாவில் வந்த ஒரு வசனத்தை பேசி காட்டி அது போல் பேசி நடிக்க சொல்வார்.

ஆனால், அப்படி பேச முடியாமல் அவர்கள் சொதப்புவதை நக்கலடிப்பார். இது பார்ப்பதற்கு செம ஃபன்னாக இருக்கும். பல வருடங்கள் இந்த நிகழ்ச்சியை அவர் நடத்தியிருக்கிறார். சில படங்களில் நடித்திருந்தார். உதவி இயக்குனராகவும் இவர் வேலை செய்திருக்கிறார். நடிகர் ரகுவரன் மறைந்த போது அவர் நடித்த ‘எல்லாம் அவன் செயல்’ படத்திற்கு ரகுவரன் குரலில் டப்பிங் கொடுத்ததே ஆதவன்தான்.

10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அம்மன், இதயத்தை திருடாதே போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிகர் ரஜினியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.


லிங்கா படத்தின் ஷூட்டிங் நடக்கும்போது ரஜினி சாரை பார்க்கப் போனேன். ரஜினி சார் நடித்துவிட்டு பிரேக்கில் இருந்தபோது நான் வந்திருப்பது பற்றி ராதாரவி அவரிடம் சொன்னார். நான் அவரிடம் சென்று ‘சார் என் பெயர் ஆதவன்’.. ஆதித்யா டிவியில’ என பேச துவங்கியபோதே அவர் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்.. சூப்பர் ஹிட் ஆச்சே.. சூப்பர் நிகழ்ச்சி.. ரொம்ப நல்லாருக்கும்’ என ஜாலியாக பேசினார். எனக்கு கண்ணீரே வந்துவிட்டது.

அதன்பின் அவர் அவரின் அறையில் இருந்தபோது என்னை அழைத்து சகஜமாக பேசியதோடு என்னோடு போட்டோவும் எடுத்துக்கொண்டார். இப்போதும், அந்த போட்டோவை என் வீட்டில் மாட்டி வைத்திருக்கிறேன். நான் தீவிரமான ரஜினி ரசிகன். நாம் பெரிதாக நினைக்கும் ஒருவர் நம்மை பற்றி தெரிந்து வைத்திருந்து நம்மிடம் ஜாலியாக பேசுவது என்பது அருமையான ஃபீல். எனக்கு அது ரஜினி சாரிடம் கிடைத்தது’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார் ஆதவன்.

Tags:    

Similar News