ரஜினியை நக்கலடித்த பிரதீப் ரங்கநாதன்!.. உடனே போன் போட்ட கமல்ஹாசன்!..
Rajini comali movie: 1996ம் வருடம் பாட்ஷா படம் வெளியாகி ஓடிகொண்டிருந்த நேரம் அப்போதை முதல்வர் ஜெயலலிதாவை எச்சரிக்கும் விதமாக ரஜினி பேச அது பத்திக்கொண்டது. அதிமுகவினர் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்ய ரஜினி அரசியலுக்கு வருவார் என பலரும் எதிர்பார்த்தார்கள். அப்போது மட்டும் ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் முதல்வராகவே வாய்ப்பும் இருந்தது.
ஆனால், எதையும் யோசித்து நிதானமாக முடிவெடுத்து செயல்படும் ரஜினி அதை செய்யவில்லை. மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸை திமுகவோடு இணைத்து கூட்டணி அமைத்து அதற்கு ஆதரவு கொடுத்து ஜெயலலிதாவை தோற்கடித்து காட்டினார். இதனால், தமிழக அரசியலில் கிங் மேக்கராகவே ரஜினி பார்க்கப்பட்டார்.
அதன்பின் தனது படங்களில் அரசியல் வசனங்களை வைத்தார். குறிப்பாக ஜெயலலிதாவை விமர்சிக்கும் வகையில் மறைமுகமாக வசனங்களே பேசி அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ‘ நான் எப்ப வருவேன். எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல வருவேன்’ என பொடி வைத்து பேசி வந்தார்.
இப்படி 25 வருடங்கள் ஓடிவிட்டது. இதற்கு மேல் பொறுக்க முடியாது என அவரின் ரசிகர்களே பொங்கியபோது ‘அரசியலுக்கு வருவது உறுதி. தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என சொன்னார். ஆன்மிக அரசியலை செய்யப்போகிறேன் என்றார். ‘கொள்கை என்ன எனக் கேட்கிறார்கள். எனக்கு தலையே சுத்திடுச்சி’ என சொல்லி ட்ரோட்லில் சிக்கினார்.
அப்போதுதான் கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அந்த படத்தில் ஒரு காட்சியை வைத்திருந்தார். பள்ளி மாணவனாக இருக்கும் ஜெயம்ரவி 16 வருடங்கள் கோமாவில் இருந்துவிட்டு கண் திறக்கும்போது யோகிபாபு அவரிடம் ‘நீ 16 வருஷம் கோமாவில் இருந்தே நம்புடா’ என்பார். அப்போது டிவியில் ரஜினி ‘நான் அரசியலுக்கு வரப்போவது உறுதி’ என ரசிகர்கள் முன்பு பேசிய வீடியோ வரும். அதை பார்க்கும் ஜெயம் ரவி ‘டேய் இது பழசு.. நான் கோமாவில் இருந்தேன்னு நம்ப மாட்டேன்’ என்பார்.
இந்த காட்சி டிரெய்லரிலும் வரும். இதைப்பார்த்து ரஜினி ரசிகர்கள் கோபப்பட்டார்கள். அதன்பின் அந்த காட்சி நீக்கப்பட்டு அதற்கு பதில் வேறு காட்சி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தை தயாரித்த ஐசரி கணேஷ் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ கோமாளி படத்தில் ரஜினி சாரை கிண்டல் பன்ற சீனை கமல் சார் பார்த்து எனக்கு பண்ணி வருத்தப்பட்டார். உடனே ‘உங்களையே வருத்தப்பட வச்சிருக்குன்னா கண்டிப்பா நீக்குறேன்னு சொல்லி அந்த காட்சியை தூக்க சொல்லிட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.
கமல் கோபப்பட்டாலும் ரஜினி அதை ஜாலியாகவே எடுத்துக்கொண்டார். லவ் டுடே ஹிட் அடித்தபின் பிரதிப்பை வீட்டிற்கு வரவழைத்து பேசிய ரஜினி ‘போன படத்துல என்னை ஓட்டுனீங்க இல்ல’ என சொல்லி சிரித்திருக்கிறார். இதை பிரதீப்பே ஊடகம் ஒன்றில் கூறியிருந்தார்.