சிகப்பு ரோஜாக்கள் படத்தில் ரஜினி..? இளையராஜா இசையில் கமலின் முதல் பாட்டு

By :  Sankaran
Update: 2024-12-29 16:30 GMT

80ஸ் குட்டீஸ்களுக்கு பல படங்கள் அப்போது மறக்க முடியாதவை. அவற்றில் ஒன்று கமல் நடித்த சிகப்பு ரோஜாக்கள். படம் வெளியானது 1978. இந்தப் படத்தில் கமல், ஸ்ரீதேவி உள்பட பலர் நடித்துள்ளனர். திகில் படம் தான். அது இளையராஜாவின் இசையில் மேலும் மெருகேறியது.

வெள்ளிவிழா கண்ட இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் பாக்கியராஜ். கமல் இந்தப் படத்தில் ஸ்மார்ட் லுக்குடன் நடித்து அசத்தி இருந்தார். இந்தப் படத்தைப் பற்றிப் பலரும் அறியாத சில தகவல்களைப் பார்ப்போம்.

இளையராஜாவின் இசையில் கமல் எண்ணற்றப் பாடல்களைப் பாடியுள்ளார். அதுல பல பாடல்கள் வெற்றிப் பாடல்களாக அமைந்துள்ளது. இளையராஜா இசையில் கமல் பாடிய முதல் பாடல் எதுன்னா அது சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வரும் நினைவோ ஒரு பறவை தான்.

அந்தப் பாடலைக் கமலை வைத்து முதலில் பாட வைப்பது என்ற எண்ணம் இல்லை என இளையராஜா ஒரு பத்திரிகை பேட்டியில் சொல்லி இருக்கிறார். அந்தப் பாட்டை முதலில் மலேசியா வாசுதேவன்தான் பாடுவதாக இருந்ததாம். அப்போது பாடலைப் பற்றிக் கேள்விப்பட்ட கமல் ஒலிப்பதிவு கூடத்திற்கு வந்தார்.

நான் அப்போது பாடலைப் பற்றிச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். நான் சொல்ல சொல்ல அவரும் என்னுடன் சேர்ந்து பாடுவதை நான் பார்த்தேன். அதன்காரணமாக 'நீங்களே இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்து விடுங்களேன்' என்று கேட்க, 'பாடலாமே..' என்று சொன்னார் கமல்.

sigappu rojakkal

அவர் பாடி முடித்ததும் 'என்ன கமல் பாடிட்டீங்க...'ன்னு இளையராஜா கேட்க, 'நீங்க பாடச் சொன்னீங்க நான் பாடிட்டேன்..' என்பது தான் கமலின் பதிலாக இருந்தது. இப்படித்தான் சிகப்பு ரோஜாக்கள் படத்திலே அந்தப் பாடல் அமைந்தது என்று அந்தப் பேட்டியில் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தைப் பற்றி இன்னொரு தகவல் உள்ளது. இந்தப் படத்துக்கான கதையை முதலில் பாரதிராஜா சிவகுமார், ரஜினியிடம் தான் சொன்னாராம். அதன்பிறகு அந்தப் படத்தில் வரும் திலீப் என்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் கமல்தான் என்பதே அவரது எண்ணமாக இருக்க அப்படித்தான் கமல் அந்தப் படத்தில் நடித்தாராம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News