சரியாக நடிக்காத எம்.ஜி.ஆர்.. கன்னத்தில் பளாரென அறைவிட்ட நபர்!.. அவர் யார் தெரியுமா?...

சிறுவயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி வாலிப வயது வரைக்கும் பல நாடகங்களில் நடித்தவர் எம்.ஜி.ஆர். சினிமாவில் வாய்ப்பு தேடியபோது சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. ஆனாலும், கிடைத்ததில் நடித்தார். ஒருகட்டத்தில் நாடகம் மற்றும் சினிமா என இரண்டிலும் நடித்து வந்தார். ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக நடிக்க துவங்கியதும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் பல சரித்திர கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக எம்.ஜி.ஆர் போடும் வாள் சண்டை ரசிகர்களுக்கு மிகவும் […]

;

Published On 2023-05-09 07:29 IST   |   Updated On 2023-05-09 07:29:00 IST

mgr

சிறுவயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி வாலிப வயது வரைக்கும் பல நாடகங்களில் நடித்தவர் எம்.ஜி.ஆர். சினிமாவில் வாய்ப்பு தேடியபோது சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. ஆனாலும், கிடைத்ததில் நடித்தார். ஒருகட்டத்தில் நாடகம் மற்றும் சினிமா என இரண்டிலும் நடித்து வந்தார். ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக நடிக்க துவங்கியதும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினார்.

அதன்பின் பல சரித்திர கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக எம்.ஜி.ஆர் போடும் வாள் சண்டை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. எனவே, அவர் நடிக்கும் எல்லா சரித்திர கதையம்சம் கொண்ட படங்களிலும் கண்டிப்பாக வாள் சண்டையும், மல்யுத்த சண்டையும் இடம் பெற்றிருக்கும்.

எம்.ஜி.ஆர் தன் திரையுலக அனுபவத்தில் பல வேடங்களில் நடித்துள்ளார். ஆனால், சரியாக நடிக்காமல் அவர் ஒருமுறை ஒருவரிடம் கன்னத்தில் அறை வாங்கினார் என சொன்னால் நம்பமுடிகிறதா?.. ஆனால், உண்மையில் அப்படி ஒருசம்பவம் நடந்தது. வாலிப பருவத்தில் கந்தசாமி முதலியார் நாடக கம்பெனியில் எம்.ஜி.ஆர் நடித்து வந்தார். அவர்களின் நாடகம் வெளிநாடுகளிலும் நடக்கும்.

அப்போது ரங்கூன் (இப்போது மியான்மர்) நகரத்தில் நடந்த ஒரு நாடகத்தில் உல்லாசத்தை தேடும் ஊதாரியாக எம்.ஜி.ஆர் நடித்தார். கணக்குப்பிள்ளையிடம் பணம் கேட்டு கோபப்படும் காட்சி வந்தது. பூட்ஸ் காலை கீழே அடித்து ‘உன்னை செருப்பால் அடிப்பேன்’ என வசனம் பேசி நடிக்கும் காட்சியில் எம்.ஜி.ஆர் ஆடிப்பாடி நடித்துள்ளார். அதன்பின் தேங்காய் என்ணைய் போட்டு தனது முகத்தில் இருந்த மேக்கப்பை கலைத்து கொண்டிருந்த போது அவரின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விழுந்தது. அடித்தவர் கந்தசாமி முதலியார்.

mgr

எதுவும் புரியாமல் எம்.ஜி.ஆர் முழிக்க ‘உனக்கு கொடுத்தது எவ்வளவு பெரிய வேடம். கோட் சூட் போட்டிருக்கும் நீ எவ்வளவு நாகரீகமாக அதில் நடிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு கிராமத்து ரவுடிபோல குதித்து குதித்து ஆடிப்பாடி நடிக்கலாமா?’ என கேட்டாரம். அப்போது முதல் எந்த கதபாத்திரம் என்றாலும் அதற்கு ஏற்றார் போல் மட்டுமே எம்.ஜி.ஆர் நடிக்க துவங்கினாராம்.

Tags:    

Similar News