கொளுக் மொளுக்குன்னு இருந்தியே!.. குச்சி போல் ஆயிட்டியே! - ஷாக் கொடுத்த ஹன்சிகா....
கொளுக் மொளுக்குன்னு இருந்தியே!.. குச்சி போல் ஆயிட்டியே! - ஷாக் கொடுத்த ஹன்சிகா....
;சின்ன குஷ்பூ என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொளுக் மொளுக் உடலில் ரசிகர்களை கவர்ந்தவர். விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி என தமிழில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வந்தவருக்கு கடந்த சில வருடங்களாக வாய்ப்புகள் குறைந்துவிட்டது. தற்போதைக்கு சிம்புவுடன் அவர் நடித்த ‘மகா’ திரைப்படம் மட்டுமே கையில் இருக்கிறது.
அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் நின்றுவிட்டது. இன்று அவரின் பிறந்தநாள் ஆகும்.
இந்நிலையில், பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு அவரே வாழ்த்து தெரிவித்துள்ளார். மிகவும் ஒல்லியாக மாறிய அவரின் உடலைக்கண்டு அதிர்ந்து போன ரசிகர்கள் ‘பழைய அழகுக்கு மீண்டும் திரும்புங்க’ என பதிவிட்டு வருகின்றனர்.