பிரபல தயாரிப்பாளர் சாலை விபத்தில் மரணம் - சின்னத்திரை உலகில் சோகம்...
பிரபல தயாரிப்பாளர் சாலை விபத்தில் மரணம் - சின்னத்திரை உலகில் சோகம்...
;By : adminram
Published On 2021-08-09 18:34 IST | Updated On 2021-08-09 18:34:00 IST
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா மகள், சத்யா ஆகிய தொடர்களின் தயாரிப்பாளர் மனோகர். இவர் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார்.
இந்த தகவலை சீரியல் நடிகை கவிதா பாரதி தனது முகநூலில் தெரிவித்துள்ளார். மனோகரின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.