மீண்டும் மருத்துவமனையில் ரஜினி.. அட என்னதாம்பா ஆச்சு எங்க தலைவருக்கு?
எங்க தலைவருக்கு என்னதாம்பா ஆச்சு என ரசிகர்கள் வாய்விட்டு புலம்பும் அளவிற்கு இந்த முறை ஒன்றும் ஆகவில்லை.
;கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என்பது நாம் அனைவரும் தெரிந்த தகவல் தான்.
ஆனால் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்றிருந்த ரஜினி அண்மையில் சென்னை திரும்பினார். திரும்பி கையோடு அண்ணாத்த படத்தின் டப்பிங் வேலையில் பிசியாக இருந்தார்.
மருத்துவமனை வீடு என சென்றுகொண்டிருந்த ரஜினி தற்போது தான் நலமாக இருக்கிறார் என்கிற செய்தி ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த ஆறுதலாக இருந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
அட எங்க தலைவருக்கு என்னதாம்பா ஆச்சு என ரசிகர்கள் வாய்விட்டு புலம்பும் அளவிற்கு இந்த முறை ஒன்றும் ஆகவில்லை. மாறாக வழக்கமாக தனது பல்லை பரிசோதித்து வரும் ரஜினி இந்த முறையும் அதற்காக மருத்துவரை சந்தித்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரசிகர்கள் நெட்டில் பரவவிட இது வைரலாக அனைவரையும் பதற வைத்துள்ளது.