இடுப்பழகி ரம்யா பாண்டியனுக்கு பிறந்தநாள்.. தெறிக்கும் இணையதளம்....

இடுப்பழகி ரம்யா பாண்டியனுக்கு பிறந்தநாள்.. தெறிக்கும் இணையதளம்....

;

By :  adminram
Published On 2021-08-13 13:51 IST   |   Updated On 2021-08-13 13:51:00 IST

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர்.

அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். ஒருபக்கம், வித்தியாசமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே, சின்னத்திரை நடிகர்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். #HBDRamyaPandian என்கிற ஹேஷ்டேக்கில் டிவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Similar News