கட்டம் கட்டி தூக்கிருக்காங்க.. ‘கங்குவா’ விமர்சனம் குறித்து பாக்யராஜ் சொன்ன தகவல்

By :  Rohini
Update: 2024-12-20 07:30 GMT

bhagyaraj

பாக்யராஜ்:

நேற்று சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாள் விழா நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல திரைப்படங்கள் திரையிடப்பட்டன. பல திரைப்பிரபலங்கள் விருதுகளை வாங்கினர். அதில் மகாராஜா படத்திற்காக விஜய்சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் அமரன் திரைப்படத்திற்காக சாய்பல்லவிக்கு சிறந்த நடிகைக்காக விருதும் வழங்கப்பட்டன.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜிவி பிரகாஷ் தட்டிசென்றார். மெய்யழகன் படத்தில் நடித்ததற்காக அரவிந்த்சாமிக்கும் விருது வழங்கப்பட்டது. வேட்டையன் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை துஷாரா விஜயன் வாங்கியிருந்தார். இந்த விழாவில் பாக்யராஜ் கங்குவா படம் பற்றி எழுந்த விமர்சனத்தை பற்றி பேசியிருந்தார்.

கங்குவா:

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் கங்குவா. பல கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என அனைவரும் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் எந்தப் படமும் சந்திக்காத ஒரு பேரழிவு என்றே சொல்லலாம்.

கங்குவா படத்திற்கு வந்தது. விமர்சனம் செய்யலாம். அதற்காக இந்தளவுக்கு படத்தை தரையில் போட்டு மிதிக்ககூடாது என்பது போல் கங்குவா படத்திற்கு நேர்ந்தது. அதனால் இதை பற்றி நேற்று பாக்யராஜ் கூறும் போது ‘கங்குவா படத்தை திரையரங்கிற்கு போய் பார்த்தேன். திரைக்கதையில் சில குறைபாடுகள் இருந்தது. ஆனால் மற்றப்படி படம் அருமையாக இருந்தது.கங்குவா படம் நல்ல திரைப்படம்தான்’

பொறுப்புடன் இருங்க::

‘அவ்வளவு பெரிய உழைப்பு அப்படத்தில் இருந்தது. சிறு சிறு குறைகளை விமர்சிக்கலாம். ஆனால் மக்கள் அந்தப் படத்தை பார்த்திடவே கூடாது என்ற நோக்கத்தில் கட்டம் கட்டி கடுமையாக விமர்சிப்பது ரொம்பத்தவறு. நம்முடைய சினிமாவை நாமே அழித்துவிடக் கூடாது.பொறுப்புடன் திரைப்படங்களை விமர்சிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

Also Read:  தயாரிப்பாளர் கேட்டதும் சம்மதித்த இளையராஜா... ஆனா கவிஞர் என்ன இப்படி இருக்காரு?

Tags:    

Similar News