கங்குவா, கரிகாற் சோழன் பாத்துமா தோணல.. வேள்பாரிக்காக ஷங்கர் தேடும் நடிகர் யார் தெரியுமா?
கேம் சேஞ்சர்:
ஷங்கரின் படைப்பில் அடுத்ததாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு கடும் விமர்சனத்திற்கு ஆளான சங்கர் அடுத்ததாக கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்கி அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். திரைப்படமும் பல கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ரிலீசாக காத்துக் கொண்டிருக்கின்றன.
அந்த படத்தில் ராம்சரண், எஸ்.ஜே சூர்யா என பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். படத்தின் பாடல்கள் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு பிறகு ஷங்கர் அடுத்ததாக எந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற ஒரு கேள்வி அனைவரும் மத்தியில் இருந்து வந்தது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் வெளியான சமயத்தில் இதே மாதிரியான ஒரு நாவல் வேள்பாரி.
வேள்பாரி:
அந்த நாவலை எடுக்கும் முயற்சியில் இருப்பதாக ஷங்கர் அறிவுத்திருந்தார். அதனால் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு பிறகு வேள்பாரி படத்தை தான் சங்கர் இயக்கும் முயற்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும் வேள்பாரி திரைப்படத்தை பொருத்தவரைக்கும் மூன்று பாகங்களாக உருவாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆரம்பத்தில் இந்த படத்தில் ரன்வீர் சிங் ,கேஜிஎப் நடிகர் யஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டன.
ஆனால் தமிழ் நடிகர்களை வைத்தே வேள் பாரி திரைப்படத்தை உருவாக்க போவதாக என சங்கரை பற்றிய தகவல் இடையில் கசிந்தது. அதற்கான பேச்சுவார்த்தையிலும் சங்கர் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதனால் தமிழ் நடிகர்களில் விக்ரம், சூர்யா ஆகிய இருவரும் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்றும் சொல்லப்பட்டது.
பிரபாஸ்:
ஆனால் இப்போது வந்த தகவலின் படி அந்த படத்தில் விக்ரம் சூர்யா லீடு ரோலில் நடிப்பதற்கு வாய்ப்பே இல்லையாம். ஏதாவது முக்கிய ரோல் இருந்தால் அதில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு இருக்கிறதாம். ஏனெனில் வேளிபாரியை பொறுத்த வரைக்கும் ஒரு மெஜஸ்டிக் லுக் இருக்க வேண்டும். அதுவும் பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கும் நடிகர்களாக இருக்க வேண்டும் என்று ஷங்கர் நினைத்திருப்பதாகவும் அவர் நினைத்ததை போல இந்த படத்தில் ஒருவேளை பிரபாஸ் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது .
ஏற்கனவே பிரபாஸை பொருத்தவரைக்கும் பாகுபலி என்ற ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்து பேன் இந்தியா ஸ்டார் ஆக மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். அதனால் அவர் இந்த படத்தில் லீடு ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும் என சினிமா துறையில் ஒரு பேச்சு அடிபட்டு வருகின்றது.
Also Read: விஜயகாந்தின் அந்தப் படத்தில் வடிவேலு வந்தது இப்படித்தான்! இவ்ளோ போராட்டம் நடந்துச்சா?