இந்த ஆளுக்கு கூட நல்லா நடிக்க தெரிதுப்பா… விஜய் தேவரகொண்டா நடிப்பில் கிங்டம் படத்தின் டிரெய்லர்…

By :  AKHILAN
Published On 2025-07-27 13:04 IST   |   Updated On 2025-07-27 13:04:00 IST

கவுதம் தின்னனுரி, இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான ஜெர்சி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது கவுதம் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து இன்னொரு வித்தியாச படமாக கிங்டம் படத்தை இயக்கி இருக்கிறார்.

ஜூலை 31ம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. ஹிந்தியில் இப்படத்திற்கு "சாம்ராஜ்யா" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழில் "கிங்க்டம்" எனப் பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இப்படம், ஒரு அதிரடி ஸ்பை ஆக்‌ஷனாக உருவாகி இருக்கிறது. படத்தில் நாயகியாக பக்யஸ்ரீ போர்ஸ் அறிமுகமாகி இருக்கிறார். மேலும் நடிகர் சத்யதேவ் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். 



 


எப்போதுமே லவ்லி பாய் லுக்கில் வலம் வரும் விஜய் தேவரகொண்டா இந்த படத்தில் முற்றிலும் ஆக்ரோஷ தோரணையில் நடித்து இருக்கிறார். முதலில் வெளியான டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், தமிழில் சூர்யா, ஹிந்தியில் ரன்பீர் கபூர் ஆகியோர் டீசருக்கு வாய் கொடுத்திருப்பது கூடுதல் ஹைலைட்.

OTT உரிமைகள் மட்டும் ₹50 கோடி விலைக்கு விற்பனை ஆனதாக தகவல். வெளிநாட்டு முன்பதிவுகளிலேயே ₹1 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டது. இதன் மூலம் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதால் ரிலீஸுக்கு பின்னர் வசூலும் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி இருக்கும் நிலையில், வித்தியாசமான கதையுடன் இப்படம் உருவாகி இருப்பதாகவும் தெரிகிறது. ஜூலை 31 இப்படம் நல்ல விமர்சனம் பெறவும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.


Full View

Tags:    

Similar News