ரொம்ப நாளாச்சு... இப்படி ஒரு படம் பார்த்து... ஆனா திரைக்கதைதான்... மையல் எப்படி இருக்கு?

By :  SANKARAN
Update: 2025-05-24 09:53 GMT

நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழ்சினிமா உலகில் கிராமிய மணம் கமழும் வகையில் ஒரு காதல் கதை படமாக வந்துள்ளது. அது தான் மையல். நேற்று வெளியானது. படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாமா...

மைனா படத்தில் நடித்த சேது தான் இந்தப் படத்தின் கதாநாயகன். ஹீரோயினாக சம்ரிதி தாரா நடித்துள்ளார். இவர்களுடன் பிஎல்.தேனப்பன், சமீபத்தில் மறைந்த சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா உள்பட பலர் நடித்துள்ளனர்.

கிராமிய கதையை அம்சமாக இயக்கியுள்ளார் ஏபிஜி ஏழுமலை. படத்திற்கு பால பழனியப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அமர்கீத் இசை அமைத்துள்ளார். பாடல்கள் மனதுக்கு இதமாக இருக்கிறது.

படத்தின் கதை என்னன்னா ஆடு திருடுறவன்தான் ஹீரோ. அவன் திருடிட்டு தப்பிச்சி ஓடி வர்றான். அப்போ ஒரு கிணற்றுக்குள்ள தவறி விழுந்துடுறான். அதனால் காலில் பலத்த அடி. அதே நாள் நைட்ல ஒரு வயதான தம்பதியரை வெட்டிக் கொலை பண்றாங்க. ஹீரோயின் சம்ரிதி கிணற்றுல விழுந்த சேதுவைக் காப்பாற்றி அடைக்கலம் கொடுக்கிறாள். சம்ரிதி பாட்டியுடன் இருக்கிறாள்.

கொஞ்ச நாள்ல இருவருக்கும் காதல் வந்து விடுகிறது. இது பாட்டிக்குத் தெரிந்ததும் அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்புறாங்க. அப்புறம் என்ன ஆச்சு? கொலை செய்தது யார் என்பதுதான் படத்தின் கதை.

சேது யதார்த்தமான நடிப்புல உள்ளம் கவர்கிறார். அருமையான நடிப்பு. போலீஸ் அவனைப் பிடிச்சி ஜெயில்ல போடறாங்க. காதலை அவங்ககிட்ட சொல்ற போது மனதை அள்ளுகிறார். ஹீரோயின் சம்ரிதி அருமையான நடிப்பு. கிராமிய காதல் அழகாக மலர்ந்துள்ளது. சம்ரிதி பாவாடை, தாவணியில் ரொம்ப அழகு. பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் சேதுவுக்கு உறவினர் என்பதால் படத்தின் கதைக்காக 2 வருஷம் மெனக்கிட்டுள்ளாராம். திரைக்கதையில் தான் கொஞ்சம் இடறல். சாதாரணமாக இப்போதெல்லாம் ரௌடி, திருடன், கொலைகாரன் மேல தான் பெண்களுக்குக் காதல் வருகிறது. அதுதான் இங்கும் காட்டப்படுகிறது. அதனால லாஜிக்கை எல்லாம் ஓரமா வச்சிட்டு படம் பார்க்கலாம். லொகேஷன் அருமை. மலை அழகு கண்களைக் குளிர்விக்கிறது.


பாட்டி கூட ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒற்றைக் குடிசையில் கதாநாயகி சம்ரிதி இருக்கிறாள். அந்த இடம் அவ்ளோ அழகு. படத்தின் ஒரே மைனஸ் என்னன்னா எளிதில் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடிவதுதான். கிளைமாக்ஸைக் கூட இப்படித்தான் இருக்கும்னு சொல்லிடலாம். மையல் என்பது காதல் சார்ந்த அழகிய உணர்வு கொண்ட படம். அதனால் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம். 

Tags:    

Similar News