டயட் இருக்க போய் பல்ப் வாங்கும் விஜயா, மனோஜ்... ஈஸ்வரியால் கடுப்பான பாக்கியா
Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
சிறகடிக்க ஆசை: சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா வெயிட்டை குறைக்க சபதம் போட வீட்டு சாப்பாடு செட்டாகாமல் போக மனோஜ் தன் கடைக்கு வந்த டயட்டீஷியனை அழைத்து வந்து பேச வைக்கிறார். அவர் சாப்பாடு லிஸ்ட்டை கொடுக்கிறார்.
அவர் காலையில் சீரகம் தண்ணி தொடங்கி சாப்பாட்டு லிஸ்ட்டை கொடுக்கிறார். நைட் ஸ்ருதி எல்லாருக்கும் பீட்சா வாங்கி கொடுக்க அதை குடித்து மனோஜ் மற்றும் விஜயா இருவருக்கும் மோசமாக வயிறு வலி வர அச்சோ டயட்டே வேண்டாம் என்கின்றனர்.
பாக்கியலட்சுமி: முடிவை நோக்கி நகர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மற்றும் கோபி இருவருக்கும் விவாகரத்து நடந்து விட்டது. எழிலும் தன்னுடைய படத்தினை முடிக்கும் தருவாயிலுக்கு இருக்கிறது. பாக்கியா பிறந்தநாள் விழா நடத்தப்பட உள்ளது.
அந்த விழாவில் ஈஸ்வரி, இனிமேல் பாக்கியா மற்றும் கோபி இருவரும் சேர்ந்து வாழ இருப்பதாக அறிவிக்கிறார். இதில் கடுப்பான பாக்கியா அப்படி எதுவும் இல்ல. எனக்கு இவருடன் சேர்ந்து வாழ விருப்பமே இல்ல எனவும் அறிவிக்கிறார். இதனால் இந்த வாரம் இரு சீரியல்களிம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.